கோவை நாடாளுமன்ற தொகுதியின் முதல் பெண் எம்.பி - பார்வதி கிருஷ்ணன்

 Thursday, March 14, 2019  04:30 PM

ஒரு இந்திய அரசியல்வாதி, தொழிற்சங்க உறுப்பினர், கோவையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்.

பார்வதி கிருஷ்ணன் 1919-ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர் பி. சுப்பாராயன், ராதாபாய் சுப்பாராயன். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தனது பிஏ (ஹானர்ஸ்) பட்டப்படிப்பை முடித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

டிசம்பர் 1942 என். கே. கிருஷ்ணனை மணந்தார். இவர்களின் மகள் இந்திரா பிரியதர்ஷிணி ஆவார். இந்தியத் தரைப்படை முதன்மைத் தளபதியாக இருந்த ஜெனரல் பி. பி. குமாரமங்கலமும், கம்யூனிஸ்ட் தலைவராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த மோகன் குமாரமங்கலமும் இவரது சகோதரர்கள்.

1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற (மக்களவை) இடைத்தேர்தலில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அத் தேர்தலில் அவர் வெற்றியடையவில்லை, மாறாக தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் என். எம். லிங்கம் வெற்றியடைந்தார். பின்னர் ஏப்ரல் 3, 1954 இல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மார்ச் 12, 1957 வரை அப்பதவியில் நீடித்தார்.

Real_Ad8

பாசிச யுத்த எதிர்ப்பு, தென்னிந் தியாவில் அனைத்திந்திய மாண வர் பெருமன்ற உருவாக்கம், இந்திய மக்கள் நாடக மன்றம், மற்றும் சோவியத் நண்பர்கள் கழகம் ஆகிய அமைப்புகளை உருவாக்கியதில் முக்கியப் பங் காற்றியவர். இவர் 1954ல் மாநிலங் களவை உறுப்பினராகவும், 1957,1973 மற்றும் 1977 ஆகிய ஆண்டுகளில் கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் களுள் ஒருவரான என்.கே. கிருஷ்ணன் இவரது கணவர். ஒருங் கிணைந்த சென்னை மாகாணத் தின் முதல்வராகவும், மகாராஷ்டிர மாநில ஆளுநராகவும் இருந்த சுப்பராயன், இவரது தந்தை. இந்திய நாடாளுமன்றத்தின் முதல் பெண் உறுப்பினரான ராதாபாய் இவரது தாயார்.

1957 மற்றும் 1977 ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்வுகளில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1974 ஆண்டின் இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றார். 1962 ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி. ஆர். இராமகிருஷ்ணனிடமும் 1980 ஆண்டு மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளர் இரா. மோகனிடமும் (கோயம்புத்தூர் தொகுதி) 1984 ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் எம். தம்பிதுரையிடமும் (தருமபுரித் தொகுதியில்) போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

2014-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் பி.எஸ்.ஜி மருத்துவமனையில் காலமானார்


Real_Ads6

Real_Custom1


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Real_Ad9
Real_Ad1
Website Square Vanavil2
Real_Right3
Real_Right2