பெற்றோரே காரணம் - காமுகர் பிடியில் பெண்கள் சிக்க வளர்ப்பில் இருக்கிறது பாதுகாப்பு!


Source: dinamalar
 Thursday, March 14, 2019  01:30 PM

'உன்னை நம்பிதானே வந்தேன்...ஏன் இப்படி பண்றே... நான் வீட்டுக்கு போகணும்... ப்ளீஸ் என்னை விட்ரு...' என கெஞ்சி கதறுகிறாள் அந்த இளம்பெண்.மற்றொரு வீடியோவில், வார்த்தைக்கு வார்த்தை 'அண்ணா' என்று சொல்லி அழும்போது கூட அதை பொருட்படுத்தாமல், பெல்ட்டால் அடித்து அப்பெண்ணை ஆடையை கழட்ட சொல்லி துன்புறுத்துகிறான் ஒருவன். 'அண்ணா அடிக்காதீங்க. வலிக்குதுண்ணா; கழட்டுறேன்' என்று கண்ணீர் மல்க, ஆடையை கழட்டுகிறாள் அந்த பிஞ்சு மாணவி.பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு விவகாரம் தொடர்பாக, வெளியாகி வரும் வீடியோக்கள் ஒவ்வொன்றும், ரத்தக் கண்ணீரை வரவழைக்கின்றன.

'பெண்களை காமப்பொருளாக மட்டுமே நினைத்து, வலை வீசும் கொடூரர்களிடம் சிக்காமல் தப்புவது, பெற்றோர் வளர்ப்பில்தான் இருக்கிறது' என்கிறார், குடும்பநல ஆலோசகர் கோதனவல்லி.அவர் கூறியதாவது:* ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். அவர்களுடன் போதுமான நேரம் செலவழிக்க வேண்டும்.*

ஆண் குழந்தைகளுக்கு, பெண்களையும் அவர்களின் மேன்மையையும் மதிக்க, சிறுவயது முதலே கற்றுத்தர வேண்டும்.* ஒரு ஆண் அன்பாக பேசுகிறான், பழகுகிறான், விரும்பியதை வாங்கி தருகிறான் என்று நினைத்து மனதை பறிகொடுக்கக் கூடாது என்று, பெண் பிள்ளைகளுக்கு பெற்றோர் சொல்லி வளர்க்க வேண்டும்.* ஒரு பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் தொடும், தவறான வீடியோக்களை நண்பர்களுக்கு பகிரும் ஒவ்வொரு ஆணும், நம் வீட்டு பெண்களுக்கு இப்படி ஒரு கொடூரம் நடந்தால் என்ன ஆகும் என்பதை, நினைத்துப்பார்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

பெண்களுக்கு உதவும் மையம்பிரச்னைக்குள்ளாகும் பெண்களுக்கு பாதுகாப்பு அளித்து, தன் மீதான வன்முறைக்கு எதிர்த்து போராடும் வகையில், 'ஒன் ஸ்டாப் சென்டர்' எனப்படும், ஒருங்கிணைந்த சேவை மையத்தை, மாவட்ட சமூக நலத்துறை நடத்தி வருகிறது.குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களின் உதவியின்றி பாலியல் வன்முறையை எதிர்க்கும் பெண்கள், இம்மையத்தை தொடர்பு கொள்ளலாம்.


Vanavil New1
போலீஸ், சட்டம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, சேவைகளை வழங்குகிறது இந்த மையம்.மையத்தின் நிர்வாகி பிரியங்கா கூறியதாவது:இம்மையம், 24 மணி நேரமும் செயல்படும். பெண்கள் பாதுகாப்புக்கான, 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைத்தால், மாவட்ட வாரியாக ஒருங்கிணைந்த சேவை மையங்களுக்கு, இணைப்பு ஏற்படுத்தி தருவர்.நேரடியாகவும் இம்மையத்தை, பாதிக்கப்பட்ட பெண்கள் அணுகலாம்.

புகார் அடிப்படையில் உடனடி மீட்பு நடவடிக்கைகள், தற்காலிக தங்கும் விடுதி, சட்டம் மற்றும் மருத்துவ உதவிகள், உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும்.பாதிக்கப்பட்ட பெண்கள் எந்த வயதை உடையவராக இருந்தாலும், தங்கள் குழந்தைகளுடன் தங்குவதற்கு, விடுதி, உணவு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.14 வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகள் எனில் வயது வரம்பின்றியும் உடன் தங்க வைக்கலாம்.கோவை பூமார்க்கெட் பகுதியில், மாநகராட்சி கட்டடத்தில் செயல்பட்டு வரும், கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தை, 0422 -2555126 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.'விழிப்புணர்வு வேண்டும்'''பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆயுதம், சமூக ஊடகம். ''தங்கள் குடும்ப சூழல், வாழ்வு வரையறைகளை உணர்ந்து, சமூக ஊடகங்களை பயன்படுத்தினால் பிரச்னைகளை தவிர்க்கலாம்.

கல்லுாரி மாணவிகளுக்கும், பெண்கள் பணிபுரியும் இடங்களிலும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்கிறார் உளவியல் ஆலோசகர் அருள்வடிவு.'ஆபாச தளங்களை தடை செய்யணும்'''ஆண்ட்ராய்டு போன்களில், இலவச அன்லிமிட்டடு இன்டர்நெட் வசதி வந்து விட்டது.

ஆபாச வெப்சைட்டுகள், சினிமாக்கள், 'டிவி' நிகழ்ச்சிகளை அரசு முழுமையாக தடை செய்ய வேண்டும். இளைஞர்களும், சமூக ஊடகங்களை வரைமுறையுடன் கையாள கற்றுக் கொள்ள வேண்டும். பள்ளிகளில் கல்வியுடன், பண்பும் சேர்த்து கற்று தர வேண்டும். மனதை நெறிபடுத்த முடியாமல் தவிப்போர், ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்தலாம்,'' என்கிறார், மனநல நிபுணர் ராதாகிருஷ்ணன்.






Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2