இன்றைய தினம் - மார்ச் 14

 Thursday, March 14, 2019  04:30 AM

பை நாள் π

பை நாள் மற்றும் பை அண்ணளவு நாள் என்பன என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 14ம் நாள் பை நாளாக கொள்ளப்படுகின்றது. அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும். இந்த எண், அதாவது 3.14 என்பது அண்ணளவாக குறிக்கும். இது மார்ச் 14 1:59:26 என்ற குறிப்பிட்ட நேரத்திலும் கொண்டாடப்படுகிறது. (π = 3.1415926).

1918 – கே.வி.மகாதேவன், தென்னிந்திய இசையமைப்பாளர் (இ. 2001), பிறந்த தினம்

1883 – காரல் மார்க்சு, செருமானிய மெய்யியலாளர் (பி. 1818) நினைவு தினம்

1932 – ஜார்ஜ் ஈஸ்ட்மன், ஈஸ்ட்மேன் கோடாக்கைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1854) நினைவு தினம்

1995 – வில்லியம் ஆல்பிரெட் பவுலர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1911) நினைவு தினம்

1965 – அமீர் கான், இந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் பிறந்த தினம்

1972 – ஐரோம் சர்மிளா, இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர் பிறந்த தினம்1974 – சாதனா சர்கம், இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி பிறந்த தினம்

1794 - எலி விட்னி பஞ்சைத் தூய்மைப்படுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கும் காட்டன் ஜின் என்ற இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.

1926 - கோஸ்ட்டா ரிக்காவில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 248 பேர் கொல்லப்பட்டனர்.

1994 - லினக்ஸ் கரு (kernel) 1.0.0 வெளியிடப்பட்டது.

1995 - ரஷ்ய விண்கப்பல் ஒன்றில் அமெரிக்கர் (நோர்மன் தகார்ட்) ஒருவர் முதன் முதலாகப் பயணித்தார்.

1998 - தெற்கு ஈரானில் 6.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியது.

1837 – யாப் ஆ லோய், நவீன கோலாலம்பூரை நிறுவியவர் (இ. 1885) பிறந்த தினம்Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Noyyalmedia_right2
Website Square Vanavil2