கோடையில் உடற்பயிற்சி செய்ய ஜிம் போறீங்களா? அப்ப இத படிங்க…

 Wednesday, March 13, 2019  12:33 PM

கோடையில் உடல் எடையைக் குறைக்க ஜிம் செல்பவராக இருந்தால், அங்கு செய்யும் உடற்பயிற்சியால் நல்ல பலன் கிடைக்க ஒருசில விஷயங்களை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

மற்ற காலங்களை விட கோடைக்காலத்தில் உடல் எடையைக் குறைக்க முயற்சித்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும் என பலரும் சொல்வதை கேட்டிருப்பீர்கள். அது உண்மையே. இருப்பினும் கோடையில் உடல் எடையைக் குறைக்க ஜிம் செல்பவராக இருந்தால், அங்கு செய்யும் உடற்பயிற்சியால் நல்ல பலன் கிடைக்க ஒருசில விஷயங்களை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

பொதுவாக உடற்பயிற்சி செய்யும் போது உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். அதேப் போல் கோடையில் சாதாரணமாக வெயிலின் தாக்கத்தால் உடல் வெப்பம் அதிகரிக்கும். உடலின் வெப்பநிலை அளவுக்கு அதிகமானால், அதனால் பல மோசமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை கோடையில் ஜிம் செல்பவர்கள் மனதில் கொள்ள வேண்டியவைகள் குறித்து கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றை மனதில் கொண்டு நடந்து நன்மைப் பெறுங்கள்.

Real_Ads6

கோடையில் ஜிம் செல்பவர்கள், இதுவரை குடித்து வந்த நீரின் அளவை விட சற்று அதிகமாகவே குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், வியர்வையின் வழியே உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவு குறைந்து, உடல் வறட்சி அடைந்துவிடும். ஆகவே உடற்பயிற்சிக்கு முன் மற்றும் பின் அதிகளவு நீரைக் குடியுங்கள். எலக்ட்ரோலைட்டுகள் அதிகப்படியான வியர்வையால் உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் அளவு குறையும். எனவே கோடையில் போதுமான அளவு சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்தை கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கு எலுமிச்சை ஜூஸில் உப்பு சேர்த்தும், அடிக்கடி இளநீரையும் குடிக்க வேண்டும். கோடையில் உடற்பயிற்சி செய்ய உகந்த நேரம் அதிகாலை தான். இதனால் நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட முடியும்.

காய்கறிகள் மற்றும் பழங்கள் முக்கியமாக காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். அதிலும் நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை எடுப்பது மிகவும் நல்லது. அதுவும் உடற்பயிற்சிக்கு பின் சாப்பிடுவது இன்னும் நல்லது. எளிய உடற்பயிற்சிகள் கோடையில் கடுமையான உடற்பயிற்சிகளை நீண்ட நேரம் செய்வதைத் தவிர்த்து, எளிய உடற்பயிற்சிகளை அளவாக மேற்கொள்வதே புத்திசாலித்தனம். தளர்வான உடைகள் குறிப்பாக கோடையில் உடலுக்கு போதிய காற்றோட்டம் கிடைக்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சி செய்யும் போது, இறுக்கமான உடைகளை அணியாமல், தளர்வான சற்று ஸ்டைலான உடைகளை அணிந்து கொள்ளுங்கள். இதனால் உடற்பயிற்சியை செய்து முடிக்கும் வரை உடல் சற்று குளிர்ச்சியாக இருக்கும்.

இடைவெளிகள் எடுக்கவும் கோடையில் 1 மணிநேரத்திற்கு மேல் உடற்பயிற்சியில் ஈடுபடாதீர்கள். மேலும் இந்த ஒரு மணிநேரத்திலேயே சிறு இடைவெளிகளை அவ்வப்போது எடுக்க வேண்டும். அப்படி இடைவெளியின் போது நீரையும் பருக வேண்டும்.


Real_Ad8

Real_Ad7


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Real_Ad1
Website Square Vanavil2
Real_Right3
Real_Right2
Real_Ad9