கோவையில் தேர்தலில் போட்டியின்றி தேர்வான எம்.பி., - ஒரு ஆச்சர்ய சம்பவம்

 Tuesday, March 12, 2019  04:30 PM

அரசியலில் போட்டி அதிகரித்துவிட்ட இந்த காலத்தில், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு, ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதே ஆச்சரியம். ஆனால், நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில், நிலைமை அப்படிஇல்லை. லோக்சபா உறுப்பினர்கள் கூட, போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது, நடந்திருக்கிறது. ஏன், தமிழகத்தில் கூட நடந்திருக்கிறது.

முதல் பொதுத் தேர்தல் நடந்த, 1952ல், கோவை லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர், டி.ஏ.ராமலிங்கம் செட்டியார், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ஐந்து பேரில், ராமலிங்கம் செட்டியாரும் ஒருவர். நாட்டில், கூட்டுறவு சங்க அமைப்பை ஏற்படுத்திய முன்னோடிகளில் ஒருவரான இவர், அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகவும் பதவி வகித்தவர். நாட்டில் இதுவரை நடந்த லோக்சபா தேர்தல்களில், மொத்தம், 23 பேர், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


Vanavil New1
இரண்டாம் பொதுத்தேர்தல், 1957ல் நடந்தது. அதிலும், ஐந்து பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அடுத்த லோக்சபா பொதுத்தேர்தல், 1962ல் நடந்த போது, மூன்று பேர், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில், முன்னாள் மத்திய நிதியமைச்சர், டி.டி.கிருஷ்ணமாச்சாரியும் ஒருவர். அவர், திருச்செந்துார் தொகுதியில் இருந்து, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்ந்து, 1967 லோக்சபா பொதுத்தேர்தலில், ஐந்து பேர், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். கடந்த, 1971 லோக்சபா தேர்தலில், லட்சத்தீவு தொகுதியில் இருந்து, பி.எம்.சையது, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 1977 பொதுத்தேர்தலில், இருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான, பரூக் அப்துல்லா, 1980 லோக்சபா தேர்தலில், ஸ்ரீநகர் தொகுதியில், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதே தொகுதியில், 1989ல் போட்டியிட்ட முகமது ஷபி பட், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவரே, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வர்களில், கடைசி வேட்பாளர் என்ற பெருமைக்குரியவர்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2