சைலண்ட்வேலி தேசிய பூங்கா

 Monday, March 11, 2019  08:30 PM

கோவையில் இருந்து சுமார் 95 கிமி தொலைவில் கேரள மாநிலத்தில் உள்ளது இந்த சைலண்ட்வேலி தேசிய பூங்கா,கோவையில் இருந்து தடாகம் சாலை வழியாக ஆனைக்கட்டி மலைசாலை வழியாக தமிழக- கேரள எல்லையான ஆனைக்கட்டியில் இருந்து கேரள மாநிலத்தின் அட்டபாடியை அடுத்துள்ளது இந்த தேசிய பூங்கா,கோடை காலங்களில் இங்கு செல்ல அனுமதி இல்லை..இதை பற்றி கொஞ்சம் விரிவாக பார்கலாம்...

கோவையின் தடாகம் சாலையில் இருந்து மாங்கரை வனத்துறை சோதனைசாவடியை தாண்டியதும் மலைபகுதி ஆரம்பமாகிறது,வழக்கம்போல இயற்க்கை அன்னை உங்களை பசுமையுடம் வரவேற்க்கும்... இரண்டு பக்கமும் காடுகள் நிறைந்த ஆனைகட்டி சாலையை பார்பதற்க்கு மிக அழகாக இருக்கும்..செல்லும் வழியில் யானை சாணங்களை காணலாம்.. அதிர்ஸ்டம் இருந்தால் யானையை காணலாம்.. குளிர் ஓரளவிற்க்கு இருக்கும்..கிட்டதட்ட மசினக்குடியில் இருக்கும் அதே குளிர் இங்கும் இருக்கும்...

அந்த சாலையில் பயணித்தால் தமிழக- கேரள எல்லையான ஆனைக்கட்டி உங்களை வரவேற்க்கும் ,நாம் கேரள எல்லையை தொட்டுவிட்டோம் என்பதற்க்கு அடையாளமாக லாட்டரி சீட்டு கடைகள் ஆங்காங்கே தென்படும்..அதை தொடர்ந்து இருபக்கமும் காடுகள் சூழ்ந்த சாலை வழியாக நீங்கள் அட்டபாடியை நோக்கி செல்ல வேண்டும்..போகும் வழியெல்லாம் இயற்கையின் அழகில் எங்கும் பசுமையாக காட்சியளிக்கும்..

அந்த சாலையின் வழியாக பயணித்தால் வலதுபுறம் பவானி ஆறு தொடர்ந்து கொண்டு இருக்கும் அதற்க்கு அடுத்து அட்டபாடி உங்களை வரவேற்கும்..அட்டபாடியில் இருந்து சுமார் 10 தொலைவில் அமைந்துள்ளது சைலண்ட் வேலியின் வனத்துறை அலுவலகம் அமைந்துள்ளது..

அந்த அலுவலகத்தில் இருந்து ஜீப் மூலமாக சுமார் 1 1/2 மணி நேரத்திற்க்கு மேலாக மிகுந்த அடர்ந்த காடுகளின் வழியாக பயணிக்க வேண்டும்...

ஒரு மூன்று நாட்களுக்கு முன்னதாக தொலைபேசியின் வாயிலாக நீங்கள் பயணம் செல்வதற்க்கு முன்பதிவு செய்ய வேண்டும்..முன்பதிவு இல்லாமல் செல்ல முடியாது..இந்த தேதியில் இத்தனை பேர் வருகிறோம் என்று தொலைபேசி வாயிலாக சொல்லிவிட்டால் போதுமானது...

ஜீப் வாடகை ரூ.1100 + நபருக்கு ரூ.78 + ஜீப் கெய்டு கட்டணம் ரூ.300 என நான்கு பேர் செல்வதற்கு உத்தேசமாக சுமார் ரூ.1500 கட்டணம் வசூலிப்பார்கள்...அங்கு பயண சீட்டுகளை பெற்றுகொண்டு
அந்த அலுவலத்தில் இருந்து ஜீப் மூலமாக சுமார் 1 கிமி தொலைவு பயணித்தால் சைலண்ட் வேலியின் நுழைவுவாயில் வரவேற்கும் அங்கு சோதனை செய்துவிட்டு பயணத்தை தொடரலாம்...

ஆரம்பமுதலே அடர்ந்த காடுகள் உங்களை வரவேற்கும்..சூரியனின் வெளிச்சம் கூட நீங்கள் செல்லும் பாதையில் படாத அளவிற்க்கு அடர்ந்த காடுகளாக இருக்கும்..வழியெங்கும் அடர்த்தி காடுகள்,தேக்கு மரங்கள்,சந்தன மரங்கள் என்று பலவகை மரங்கள் கொண்ட அடர்ந்த காடுகளாக இருக்கும்.

சிறிய சிறிய அருவிகளும் , பெரியவகை வண்ணத்து பூச்சிகளும்,சிங்கவால் குரங்குகளும்,கரும்குரங்குகளும் தென்படும்...பலவகையான குருவிகளின் சத்தமும் கேட்கும்,இதுவரை நீங்கள் கேட்காத குருவிகளின் சத்தமும்,பூச்சிகளின் சத்தமும் உங்கள் மனதை சந்தோசபடுத்தும்..

Real_Ads6

இப்படி ஒரு அடர்தியான காடுகளை நீங்கள் பார்திருக்க முடியாது,போகும் வழியெல்லாம் விதவிதமான மரங்கள்,பூச்சிகள்,பெரிய அணில்களை காணலாம்..மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை சார்பாக காடுகளில் வைக்கப்பட்ட கேமாராக்களில் 'ஒரு புலியானது யானையை வேட்டையாடி உண்பதை ' படம்பிடித்தது..இந்த படத்தை நீங்கள் அந்த வன அலுவலகத்தில் காணலாம்...

மலைகாடுகள் என்பதால் எப்பவும் மழை தூரிக்கொண்டே இருக்கும்..யானைகள்,புலிகள்,சிறுத்தைகள்,கரடிகள் போன்ற பலவகையான விலங்குகள் வாழும் அடர்ந்த காடு...
இந்திய ராஜநாகங்கள் வாழ இந்த காடுகளில் அதிக அளவில் இருக்கின்றன...இந்த காடுகளின் நுழைவுவாயிலில் பழங்குடியின மக்கள் வசிக்கிறார்கள்..இந்த காடுகளில் பலதரப்பட்ட மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் உள்ளதால் மிகவும் பாதுகாக்கப்பட்ட காடுகளாக இருக்கிறது..

சுமார் ஒன்றறை நேர காட்டுபயணத்தின் போது நீங்கள் நிறைய விலங்குகளை பார்கலாம்..அட்டைபூச்சிகள் அதிகம் உள்ள பகுதி,இறுதியாக நீங்கள் சைலண்ட் வேலியின் டவர் இருக்கும் பகுதியை அடைவீர்கள் ,அங்குவரை மட்டுமே ஜீப் ..அதற்க்கு பின்னர் நடந்துதான் செல்ல வேண்டும்...அங்குள்ள சிறிய பூங்கா உங்களை வரவேற்கும்..அங்கிருந்து சுமார் 1 கிமி தொலைவு நடந்தால் பாவானி ஆறு உற்பத்தியாகும் இடத்தை காணலாம்..

அங்கு ஒரு தொங்கும் பாலம் உள்ளது..பாவனி ஆற்றின் நீர் மிகவும் தூய்மையாக இருக்கும்...அங்கிருந்து பல மலைத்தொடர்களை நீங்கள் காணலாம்...பின்னர் அங்கிருந்து வந்து ஜீப் நிற்கும் இடத்தின் அருகே உள்ள வாட்ச் டவரில் ஏரி சைலண்ட் வேலியிம் முழு அழகையும் கண்டுகளிக்கலாம்..சுமார் 100 அடி இருக்கும் இந்த வாட்ச் டவரில் ஏறும் போது கொஞ்சம் பீதியாக இருக்கும்..பீதியை வெளிகாட்மால் ஏறினால் ஒட்டுமொத்த அடர்ந்த காடுகளின் அழகையும் ரசிக்கமுடியும்...

எல்லாவற்றையும் பார்துவிட்டு அங்கிருந்து ஜீப் வழியால் திரும்பவும் 1 1/2 மணி நேரம் பயணித்து வனத்துறை அலுவலகம் அடையலாம்...

அந்த அலுவலகத்தின் பின் பகுதியில் வனத்துறை சார்பாக ஒரு கடை உள்ளது அங்கு சந்தனகட்டை,மூலிகைகள்,பட்டைகள்,சாம்பிரானி ,ஏலக்காய்,தேன் என பல பொருட்கள் விற்பனை செய்யபடுகிறது...இந்த பொருட்கள் எல்லாமே நாம் சென்று வந்த அடர்ந்த காடுகளில் இருந்து பெறப்படுகிறது ..எனவே இங்கு வாங்குவது சிறந்ததாக இருக்கும்...

சைலண்ட் வேலியில் தங்குவதற்க்கு வனத்துறை ஓய்வு விடுதி காட்டின் நடுப்பகுதியில் உள்ளது..நீங்கள் பயணம் செல்லும் போது இந்த விடுதியை பார்கலாம்...

மாவோஸ்டுகளின் நடமாட்டம் அடர்ந்த காடுகளில் இருப்பதால் டிரெக்கிங் தற்காலிகமாக அனுமதி இல்லை...இப்போது அனுமதிப்பதாக செய்தி ...வனத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு அதனை உறுதிசெய்தி கொள்ளவும்...

இங்கு உற்பத்தியாகும் பாவானி ஆறு கோவை மக்களின் தாகம் தனிக்கிறது.. இந்த மலைகாடுகளில் பல ஆறுகள் உற்பத்தியாகின்றன...நீர் வளம் ,அடர்ந்த வனவளம் மிக்க இந்த காடுகள் பாலக்காடு மாவட்டத்தை நம் அரசியல்வாதிகள் கேரளாவிற்கு தாரை வார்காமல் இருந்து இருந்தால் இன்று தமிழ்நாட்டோடு இருந்து இருக்கும்.....


Real_Ad5

Real_Ad7


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Real_Ad9
Real_Ad1
Real_Right3
Website Square Vanavil2
Real_Right2