கோவை மேட்டுப்பாளையத்தில் 103 வயதிலும் உழைக்கும் பாட்டி

 Monday, March 11, 2019  06:30 PM

கோவை மாவட்டம் மேட்டுப் பாளையம் அருகேயுள்ள தேக்கம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாப்பம் மாள் என்றழைக்கப்படும் ரங்கம் மாள் பாட்டி (103), 1916-ல் மருதா சலம்-வேலம்மாள் தம்பதிக்குப் பிறந்தார்.

தற்போதும், தமக்கு சொந்த மான 3 ஏக்கர் நிலத்தில் மானாவாரி பயிர்கள் மற்றும் நாட்டுக் காய்கறிகளைப் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். 1964-ல் தேக்கம்பட்டி கிராம ஊராட்சி பஞ்சாயத்து உறுப்பினராகவும், 1970-ல் காரமடை ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். கோவை வேளாண் பல்கலைக்கழக விவாதக்குழு அமைப்பாளர், மாதர் சங்கத் தலைவியாகவும் பொறுப்பு வகித்துள்ள இவர், பல்வேறு மேடைகளிலும் பேசியுள்ளார். 1949 செப்.17-ல் திமுக தொடங்கப்பட்டது முதல் இதுவரை அக்கட்சியின் உறுப்பினராக உள்ள ரங்கம்மாள், கடந்த 22-ம் தேதி தனது தள்ளாத வயதிலும் சென்னை சென்று, திமுக தலைவராகப் பொறுப்பேற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித் தார்.

தினமும் காலை 6 மணிக்குள் எழுந்துவிடும் ரங்கம்மாள் பாட்டி, குளிப்பது, சமைப்பது உட்பட தனது அனைத்து தேவைகளையும் தானே பூர்த்தி செய்துகொள்கிறார். யாருடைய உதவியுமின்றி மாடிப் படிகளிலும் சாதாரணமாக ஏறிச் செல்கிறார். காலை 9 மணிக்கு மேல் வீட்டைவிட்டு வெளியேறும் விவசாயத் தோட்டத்துக்குச் செல் கிறார். கணவர் இறந்து பல ஆண்டு களானாலும் தளராமல் விவசாயப் பணிகளைக் கவனிக்கிறார். களைச் செடிகளை அப்புறப்படுத்துவது, தண்ணீர் விடுவது என கடும் வெயிலிலும் உற்சாகத்துடன் பணி யாற்றுகிறார். மதியம் 2 மணிக்கு மேல் மீண்டும் வீடு திரும்பி விடுகிறார்.

Vanavil New1

ஆரோக்கியத்தின் ரகசியம்

கண்ணாடி, காது கேட்கும் கருவி, கைத்தடி என எதுவுமே இவருக்குத் தேவைப்படவில்லை. நூற்றாண்டைக் கடந்தபோதிலும் தள்ளாட்டம் இல்லாமலும், வார்த்தைகள் குளறாமலும் பதில் அளிக்கிறார் ரங்கம்மாள் பாட்டி.

'சோர்வற்ற உழைப்பும், உற்சாக மனநிலையுமே உடலுக்கும், உள் ளத்துக்கும் மருந்தாகத் திகழ்கிறது. ரசாயனப் பயன்பாட்டில் நமது விவசாயம் சிக்கிக் கொண்டதால், உணவே விஷமாகி வருகிறது பெரும் வேதனை அளிக்கிறது. பழைய முறைப்படி இயற்கை விவ சாயத்துக்கு அனைவரும் மாறி னால் மட்டுமே, நோய்களின்றி ஆரோக்கியமான வாழ்வைப் பெற இயலும். ருசிக்காக உண்ணாமல் ஆரோக்கியத்தைக் கணக்கில் கொண்டு சத்தான தானியங்கள், காய்கறிகள், கீரைகளை இளம் வயதினர் உட்கொள்ள வேண்டும். பொறாமையும், கோபமும் ஆயுளைக் குறைக்கும். மேலும், வீட்டில் உள்ள பெரியவர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் போக்கு அதிகரித்து வருவது பெரும் வேதனை அளிக்கிறது' என்றார்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2