வீட்டின் உள்ளே சுத்தமாக காற்று இருக்க என்ன செய்ய வேண்டும்

 Monday, March 11, 2019  04:29 PM  1 Comments

பலர் வேலை பளுவினை விட சுகாதாரமற்ற காற்றினாலேயே சோர்வாகின்றனர். நோயாளி ஆகின்றனர். வீட்டுக்குள் இருக்கும் காற்று அதிக சுகாதாரமற்று இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

காலை முதல் இரவு வரை பணி செய்யும் இடத்திலேயே காலத்தினை செலவழிப்பவர்கள் இன்று பலர் உள்ளனர். மிகவும் சோர்ந்து இரவு வீடு திரும்பும் இவர்களுக்கு வீடுதான் சொர்க்கம். அவர்கள் வீட்டில் விடும் மூச்சுதான் நிதானமான மூச்சு. ஆரோக்கியமான காற்று தான் அவர்களின் முதல் சக்தி. இந்த காற்று தூய்மையானதாக இல்லாவிட்டால் அதுவே அவர்களை மேலும் சோர்வாக்கி நோயாளி ஆக்கி விடும். பலர் வேலை பளுவினை விட சுகாதாரமற்ற காற்றினாலேயே சோர்வாகின்றனர். நோயாளி ஆகின்றனர்.

வீட்டுக்குள் இருக்கும் காற்று அதிக சுகாதாரமற்று இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. வீட்டினுள்ளேயே வேலை செய்து காலத்தினை கடப்பவர்களும் உண்டு. அத்தகையோர் கூடுதலாக உடல் பாதிப்பினை அடைகின்றனர். ஆக வீட்டினுள் காற்று சுத்தமாக இருக்க என்ன செய்ய வேண்டும்.

* வீட்டிற்குள் வளர்க்க கூடிய செடிகளை வளர்க்க வேண்டும். செடிகளுக்கு காற்றின் மாசினை குறைக்கும் சக்தி உண்டு. இதுவே தீர்வு என்றாகி விடாது. ஆனாலும் இந்த முயற்சி சிறிதளவு தீர்வினைத் தரும். செடிகள் மனதிற்கும் இதம் அளிக்கும்.

* வீட்டினுள் வெளிக்காற்று வந்து செல்ல ஜன்னல்களை தகுந்த பாதுகாப்போடு திறந்து வையுங்கள். வெளிக்காற்று தூசு வராமலிருக்க அவற்றினை வலைகளின் மூலம் தடுத்து விடுங்கள். அதிக ரசாயனப் பொருட்களை கொண்டு வீடு, பொருட்களை சுத்தம் செய்யும் பொழுது அந்த கடினமான வாசனை-உடனே காற்றில் வெளியேற வேண்டும். இல்லையெனில் நச்சு வாசனை உடலில் அலர்ஜி மற்றும் பாதிப்பினை ஏற்படுத்தும். வெளியில் அணிந்து செல்லும் ஷீ, செருப்புகளோடு வீட்டிற்குள் நுழையாதீர்கள். பல வகை கிருமிகளை வீட்டிற்குள் கொண்டு வந்து விடுவீர்கள். அடிக்கடி உங்கள் ஷீ, செருப்புகளை முறையாக கழுவி விடுங்கள்.

* கார்பெட் எனும் தரை விரிப்பு பார்க்க மிக அழகுதான். ஆனால் அதனை அக்கறை எடுத்து சுத்தம் செய்யாவிட்டால் எண்ணற்ற கிருமிகளின் இருப்பிடம் ஆகி விடும். நோய்க்கு குறைவே இருக்காது. எனவே கார்பெட் உபயோகிப்பவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக அதனை பராமரிக்க வேண்டும்.

* அதிகமான பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்காதீர்கள். உங்கள் கேஸ் ஸ்டவ், ஹீட்டர், சிம்னி இவைகளை முறையாய் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
இயற்கை முறையில் மூளையினை ஆரோக்கியமாக வைக்கும் வழிகள் ஒருவரது மூளை அவரது உடலின் முக்கியமான உறுப்பு. மூளையினையும் மனதினையும் இங்கு பிரித்து பார்க்க வேண்டும். இங்கு குறிப்பிடப்படுவது மூளையினைப் பற்றிதான்.

* தினமும் 20 நிமிடங்கள் தியானம் செய்யுங்கள். இது உங்கள் மூளை, மனது, உடல் மூன்றினையும் பாதுகாக்கும். பல ஆயிரக்கணக்கான வருடங்களாக நம் கலாச்சாரத்தில் பிணைந்த இது மிகப்பெரிய இயற்கை மருந்து. வயிறு காலியாய் இருக்கும் நேரத்தில், அமைதியாய் ஓர் இடத்தில் அமர்ந்து, முதுகு நிமிர அமர்ந்து, கண்களை மூடி மூச்சினை மட்டும் கவனித்தால் போதும் மூச்சு நிதானமாய் நிகழ வேண்டும். இதனை காலையில் செய்வது மிகவும் நல்லது.

Vanavil New1

* எப்பொழுதும் சுறுசுறுப்பாய் இருங்கள். அப்பொழுதுதான் மூளைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும்.

* பகலில் 20 நிமிடங்கள் நாற்காலி (அ) சாய்வு நாற்காலியில் அமர்ந்து கண்ணை மூடி ஓய்வு எடுங்கள். இது உங்கள் மூளையின் செயல்திறனை வெகுவாய் கூட்டும்.

* குறுக்கெழுத்து போட்டிகள், புதிர்கள் இவைகளைச் செய்யுங்கள்.

* ஒரு நேரத்தில் செய்யும் வேலை ஒன்றின் மீதே கவனம் செலுத்துங்கள். போன் பேசிக் கொண்டே, சாப்பிட்டுக் கொண்டே அப்படியே டிவியும் பார்ப்பது போன்ற செயல்களால் மூளையால் எதனையும் முழுமையாய் கையாள முடியாது.

* புதுமொழி ஒன்றினைக் கற்றுக் கொள்ளுங்கள். இதற்கு வயது வரம்பு கிடையாது. இது மூளைக்கான சிறந்த பயிற்சி.

* ஆரோக்கியமான உணவினை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

* எழுதுங்கள். கம்ப்யூட்டரில் டைப் அடிப்பதனை விட எழுதுவது வலது பக்க மூளையினை நன்கு தூண்டும்.

* எதனையும் ஆக்கப் பூர்வமாகவே சிந்திக்கப் பழகுங்கள்.

* பட்டை தூளினை சிறிது, நீரில் கொதிக்க வைத்து குடியுங்கள். இது உங்களை ‘ரிலாக்ஸ்’ செய்யும்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


venkateshkumar venkateshkumar commented on 2 month(s) ago
semma bros

Website Square Vanavil2