பிறந்த குழந்தையை பார்க்க போகும் போது செய்ய வேண்டியவை

 Monday, March 11, 2019  04:27 PM

நமது நெருங்கிய உறவுகளுக்கு, நண்பருக்கு, தோழிக்கு இவர்களில் யாருக்காவது குழந்தை பிறந்திருந்தால் பார்க்க போகும் போது இந்த விஷயங்களை எல்லாம் மறக்கக்கூடாது.

குழந்தை என்றால் யாருக்கு தான் பிடிக்காது. திருமண வாழ்க்கைக்கு பின் மறு வாழ்க்கை என்றால் அது குழந்தை பிறந்த கணத்தில் இருந்தே தொடங்கி விடும். நமது நெருங்கிய நண்பர்களுக்கு, தோழிகளுக்கு, உறவினர்களில் எவருக்காவது குழந்தை பிறந்திருந்தால் நாம் செய்ய வேண்டியது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

முதலில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி செல்லக்கூடாது. குழந்தை பார்த்து கொள்பவர்களிடம் இந்நேரத்தில் பார்க்க வருகிறோம் என்ற அறிவிப்பு கொடுத்து தான் செல்ல வேண்டும். இதனால் அவர்களுக்கு எந்த ஒரு வித தொந்தரவும் இருக்காது.

மிக குறைந்த நேரமே எடுத்து கொள்ள வேண்டும். குழந்தையை பார்த்துவிட்டு, தாயின் நலத்தை விசாரித்து முடித்த பின் மற்றொரு நாள் வருகிறோம் என்று புறப்படுவது நல்லது. ஏனெனில் குழந்தை பார்க்க நிறைய பேர் வந்து செல்வார்கள் நாமும் அதிக நேரம் இருந்தால் மற்றவர்களை கவனிப்பது சிரமாகி விடும்.

Vanavil New1

உடல்நிலை சரியில்லை என்றால் பிறந்த குழந்தையை பார்க்க செல்ல வேண்டாம். நமக்கு இருக்கும் நோயின் பாதிப்பு எதுவாக இருந்தாலும் பச்சிளம் குழந்தையை உடனே தாக்குவதற்கு அதிக வாய்ப்புண்டு.

நாமும் சரி, நமது உடலும் சரி சுத்தமாக இருக்க வேண்டும். எதிர்ப்பு சக்தி என்பது பிறந்த குழந்தைக்கு இனிதான் உருவாகும். அதனால் நாம் சுத்தமாக இருக்க வேண்டும், அசுத்தமான கைகளால் குழந்தையை தூக்குவது நல்லதல்ல.

குழந்தையை பார்க்க போகும் போது பரிசுகள் நிச்சயம் அவசியமான ஒன்று. என்ன தேவை என்பதை நன்கு அறிந்துவிட்டு பின்பு பார்க்க செல்லுங்கள்.

முடிந்த வரை குழந்தையை பார்க்க சென்றால் உங்களால் முடிந்த உதவியை அவர்களுக்கு செய்து கொடுத்து வாருங்கள்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2