நம்ம ஊரு சமையல் : செட்டிநாடு தக்காளி சாதம்

 Sunday, March 10, 2019  07:30 PM

செட்டிநாடு உணவு வகை என்றாலே அது எவ்வளவு எளிய சமையலாக இருந்தாலும் எதிர்ப்பார்ப்பு என்பது ஒரு மடங்கு அதிகமே இருக்கக்கூடும். ஆம், தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு பகுதி தான் செட்டிநாடு. இந்த சமையலுக்கு இருக்கும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் தூவப்படும் மசாலாவின் மணம் தான் என்பதில் மாற்றமில்லை. அத்துடன் சைவ பிரியர்களுக்கு கூட சுவையான உணவை என்றுமே தருவதில் நம்பர் 1 செட்டிநாடு தான். இவர்கள் சமையலில் அப்படி என்ன தான் இருக்கிறது என நாம் யோசித்தால் அவர்கள் சொல்லும் பதில், 'நாங்கள் சேர்ப்பது புளி, மிளகாய், சோம்பு, பட்டை, இலவங்கம், கறி இலை, கரு மிளகு, சீரகம், வெந்தயம்' என இயற்கை அளித்த பொருளையே பட்டியலிட, இதில் செயற்கை என்பது எங்கே எனவும் நம்மை தேடவைத்து நாவை உச்சுக்கொட்டவும் செய்கிறது. அப்படி ஒரு சுவையான செட்டிநாடு தக்காளி சாதம் செய்வது எப்படி என்று தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

இதோ செட்டிநாடு தக்காளி சாதம் சமையல் குறிப்பு உங்களுக்காக...
தேவையான பொருட்கள்:

அரிசி - 2 கப் (வேகவைத்தது)

தக்காளி - 2 (நன்றாக நறுக்கியது)

வெங்காயம் - 1 (மெல்லிசாக நறுக்கியது)

சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 1 (செங்குத்தாக நறுக்கியது)

புதினா இலை - கை அளவுக்கு (கிள்ளிக்கொள்ளுங்கள்)

கொத்தமல்லி - சிறு கொத்து (நன்றாக நறுக்கியது)

இலவங்கப்பட்டை குச்சி - 1

கிராம்பு - 2

கறி இலைகள் - தேவைக்கேற்ப

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப
அரைக்க தேவையானவை:

இஞ்சி - 1 இஞ்ச் (லேசாக நறுக்கி கொள்ளுங்கள்)


Vanavil New1
பூண்டு - 3 அல்லது 4 பல்

பெருஞ்சீரக விதை - 1 டீஸ்பூன்

செய்முறை நேரம் - 5 நிமிடங்கள்

சமைக்க தேவையான நேரம் - 15 நிமிடங்கள்

எத்தனை பேர் உண்ணலாம் - 2
செய்முறை:

1. முதலில் அரிசியை பஞ்சுபோன்று சமைத்து ஓரமாக வைத்துவிட வேண்டும்.

2. இஞ்சி, பூண்டு மற்றும் பெருஞ்சீரக விதையை அரைத்து அதையும் தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

3. ஒரு கடாயில் நெய்யை ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்கவைக்க, இலவங்கப்பட்டை குச்சி மற்றும் கிராம்பை நெய்யுடன் சேர்த்து கிண்ட வேண்டும்.

4. அத்துடன் இஞ்சி, பூண்டு மற்றும் பெருஞ்சீரகம் விதையை சேர்த்து பச்சைவாடை போகும் வரை மீண்டும் கிண்ட வேண்டும்.

5. அதன்பிறகு கறி இலைகள் மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதங்கும் வரை கிண்டிக்கொள்ளுங்கள்.

6. அத்துடன் தக்காளி சேர்த்து அரைநிலையில் வேகும் வரை கிண்ட வேண்டும். அப்போதுதான் தக்காளி மணம் சரியாக வீசும்.

7. இப்போது குறுக்கே வெட்டிய பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் தூள், புதினா மற்றும் கொத்துமல்லி இலை சேர்த்து மீண்டும் கிண்டவும்.

8. பின்னர் தேவையான சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கிளற இந்த முறை தக்காளி நன்றாக வேக வேண்டியது அவசியம். இதற்கு தேவையான நேரம் 10 நிமிடங்களாகவும் இருக்கக்கூடும்.

9. இப்போது ஏற்கனவே சமைத்து வைத்திருக்கும் சாதத்தை இந்த கலவையோடு சேர்த்து நன்றாக கிளற வேண்டும். (கிண்டுவதற்கு போர்க் பயன்படுத்தலாம்)

10. அதன்பிறகு 5 நிமிடங்களுக்கு வைத்திருந்து அடுப்பை அணைத்து விடுங்கள்.

11. அவ்வளவு தான் சுவையான செட்டிநாடு தக்காளி சாதம் இதோ ரெடி!

12. இதற்கு காலிபிளவர் மற்றும் வெள்ளரிக்காய் ரைத்தாவை தொட்டுக்கொண்டு சாப்பிட அப்படி இருக்கும் இதன் சுவை!


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2