மொட்டுக் காளான் வளர்ப்பு-ஒரு சிறப்பு அலசல்

 Sunday, June 25, 2017  01:25 PM

காளான் என்றதும் பலருக்கும் மழைக் காலம் ஞாபகத்திற்கு வரும் ஏனெனில் விவசாய நிலத்தில் அப்போது இயற்கையாக காளான் வளர்ந்திருப்பதை அனைவரும் காணலாம். இன்றைய சூழலில் அதை மாற்றும் விதமாக விஞ்ஞானமும் தொழில் புரியும் முனைப்பும் அதிகமாகி கொண்டு இருக்கும் கால கட்டத்தில் காளான் வளப்புக்கு உகந்த தொழில் நுட்பத்தை கண்டறிந்து செயற்கை முறையில் பயிரிட்டு அறுவடையும் செய்து வருகின்றனர். ஆனால் நம்மில் பலருக்கும் அறிமுகமானது சிப்பிக் காளான் மற்றும் பால் காளான் வகைகளாகும்.

எதற்காக மொட்டு காளானை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இதில் அடங்கி இருக்கம் தொழில்நுட்பமும், அதிகபடியான ஊட்டச் சத்து, சந்தைபடுத்துதல், முதலீடு போன்ற என்னெற்ற காரணங்கள் (சிப்பிக் காளான் மற்றும் பால் காளானை விட) அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது சம்பந்தமாக தமிழகத்தில் முன்னணியில் இருக்கும் ஒரு பெரிய நிறுவனத்தை அனுகி பேட்டியை வாசகர்களுக்கு வழங்கியுள்ளோம்.

இந்த நிறுவனத்திற்கு மூன்று யூனிட்கள் இருக்கின்றது – உதகை, பெரியநாய்கன்பாளையம் மற்றும் கோயமுத்தூர். பெரியநாய்கன்பாளையம் பண்ணையில் தொடங்கி உதகையில் காளானாக வளர்த்தெடுக்கப்படுகிறது, கோவையில் விற்பனை அலுவலகத்தை அமைத்துள்னர். இந்நிறுவனத்தை இயக்குபவர் அமெரிக்காவில் பயிற்சி பெற்று பல வெளிநாடுகளில் பல வருடங்கள் பணிபுரிந்து (மஸ்கட், நேபாள்) மிகுந்த அனுபவம் பெற்றவர் என்பது
குறிப்பிடதக்கது. ஆரம்பக்காலத்தில் இருபது இலட்சம் முதலீட்டிலும் (சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர்) சுமார் அறுபது இலட்சத்திற்க வங்கிகளில் கடன் பெற்றும் தொடங்கியுள்ளார்.

வரலாறு

சுமார் இருபத்தைத்து வருடங்களக்கு முன்பு அமெரிக்கன் தொழில் நுட்பத்தை இந்தியாவிற்குள் கொண்டுவந்தது இந்துஸ்தான் நிறுவனத்தின் அங்கம் வகிக்கும் பாண்ட்ஸ் நிறுவனம். இதற்கு அவர்கள் தேர்வு செய்த இடம் உதகைமண்டலம். மிக பெரிய முதலீட்டில் பாண்ட்ஸ் நிறுவனம் காளான் பண்ணையை தொடங்கியது. இதன் நோக்கமே அமெரிக்காவிற்குஏற்றுமதி செயும் எண்ணத்தில்தான் என்பது குறிப்பிடதக்கது சீனா நாட்டிலும் இதேபோல்
பெரிய முதலீட்டில் பண்ணைகள் தொடங்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதுபோன்று பல நாடுகளிலிருந்தும் காளான் வரத்து அதிகரிக்கவே அமெரிக்காவில் இயங்கி வந்த காளான் பண்ணைகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. ஆகவே அமெரிக்க அரசு ஏற்றுமதி செய்து வந்த நிறுவனங்களுக்கு Anti Dumping duty என்னும் வரியை விதித்தது. மேலும் பொருளாதார நெருக்கடி போன்ற பிரச்சனைகளால் காளான் பண்ணைகள் பல நாடுகளிலும் மூடப்பட்டன. அதேப்போல் உதகையில் இயங்கி வந்த பாண்ட்ஸ் நிறுவனமும் தொழிலாளர் பிரச்சனையால் மூடப்பட்டது. எதற்காக உதகையை பண்ணையை அமைக்க தேர்ந்தெடுக்கின்றனர் என்று அங்கு அமைந்துள்ள இயற்கையான குளிர்ச்சியான சுற்றுப்புற சூழலே, மேலும் வெப்பமண்டலங்களிலும் இதனை அமைக்கலாம்.
அதற்கு அறை முழுவதும் ஏர் கண்டி­னர் அமைக்கவேண்டும். சீரிய மின்சாரம் போன்ற அதிக பொருட்செலவுகள் தேவைப்படும்.

தொழில் நுட்பம்

தொழில் நுட்பம் அறிந்து வைத்தலே தொழிலுக்கு மூல தனம். இங்கு பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் சோதனைக்கு (லேப்) பின்பே உபயோகப்படுத்துகின்றனர்.

பொருட்கள்

வைக்கோல் (0.7 % நைட்ரஜன்)
சூரியகாந்தி புண்ணாக்கு (4.6% நைட்ரஜன்)
ஜிப்ஸம் (சாம்பல்)
கோழி எரு.

ஜிப்ஸமில் மூன்று தரங்கள் உள்ளன. அவை கடைசி தரமானது ஒரே கடைகளில்


கிடைப்பது, முதல் தரம் – பிளாஸ்டோ பாரிஸ், இரண்டாவது தரமாக ஜிப்ஸம் பவுடர் மண் பரிசோதனைக் கூடங்களில் மண் ஆய்வில் பயன்படுத்தப்படுகிறது. (PH அளவை அறிவதற்கு). இங்கு தொழில் நுட்பத்தை மிக கவனமாக கையாள வேண்டும். பண்ணையில் பயன்படுத்தப்படும் அனைத்துப்பொருட்களுமே வேளாண்மை மற்றும் தொழில் துறையினரால் கழிக்கப்படும் பொருட்களே. இதனை மிகவம் கவனத்துடன் வாங்குதல் மிகவும் முக்கியமானது

ஒரு வயலில் உரம் மற்றும் தண்ணீர் அதிகமாக கொடுக்கப்பட்டிருக்கும் மற்றொரு பண்ணை அதற்கு வேறுபட்டிருக்கும். ஆகவே இதன் நைட்ஜன் சத்தும் மாறுபடும். அதேபோல் கோழிப்பண்ணையில் தேங்காய் மஞ்சு (Coir pith) அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கும் இதில் கோழியின் எச்சம் குறைவாக இருப்பதினால் தேவையான நைட்ரஜன் கிடைக்காமலும் இருக்கலாம். இதுபோன்ற வி­யங்களை நமது சோதனையில் கண்டறிந்து அதற்கு ஈடு செய்தல் அவசியம் என்தை தெளிவாக விளக்கினார். ஈடு செய்வதென்பது கோழி எரு சூரியகாந்தி புண்ணாங்கு, ஜிப்ஸம், வைக்கோல் இவை அனைத்தையும் மக்க வைத்து
Decompost) இறுதியில் 2.2% நைட்ரஜன் சத்து இருத்தல் அவசியம். இந்த
கலவையின் நோக்கமே கார்போஹைட்ரேட்ஸ் குறைந்து நைட்ரஜன் அதன் இடத்தை கைபற்றும் (குறிப்பு கார்போஹைட்ரேட்ஸ் எங்கு உள்ளதோ அங்கு மட்டுமே கிருமிகள் வளரும்.) அது சுமார்7 நாட்களக்கு இருக்கும் மேலும் 5 நாட்களுக்கு பையோலாஜிக்கல் வழி முறைகள் கையாளப்படும். மேற்கூறிய அனைத்தும் ஒரு கட்டமாக முடிவுற்ற பின் இரண்டாம் கட்டமாக பாஸ்சூரைசே­ண் – 60 டிகிரி செல்ஸியஸ்) 60 டிகிரி வெப்பத்தில் வைத்திருத்தல் சுமார் 9 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை தொடரும். பின் 10 டிகிரியாக குறைக்கவேண்டும். பிறகு ஒவ்வொரு டிகிரியாக குறைக்க வேண்டும். சுமால் 6 முதல் 7ம்
நாளில் சோதனைசெய்தல் அவசியம். இதன் அடுத்த கட்டமாக காளான் விதைகளை 10 பத்து கிலோவாக பிரித்து பேக் செய்துள்ள கலவையில் (ம்eஉலிதுஸ்ரீலிவிமி)தூவ வேண்டும். இவை அனைத்தும் வெப்பமாக உள்ள இடத்தில் மேற்கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து அந்த பேக்கிங்கை குளிர்ந்த இடமான உதகையிலுள்ள பண்ணைக்கு எடுத்துச் சென்று அடுத்த கட்டத்தை தொடங்குவார்கள். இதற்கு மேல் கேஸிங் சாயில் எனப்படும். (Coir pith
+ Press mud – சர்கரை ஆலையின் கழிவு) பொருளை இந்த 10 கிலோ பேகிங் மேல்
வைப்பாகள் அதன் பின் அறையை இருக்கமாக (காற்றுபுகாதவாறு மூடிவிட்டு) சுமார் 24 டிகிரி முதல் 26 டிகிரி வரை உஷ்ணம் வைக்க வேண்டும். இதன் மேல் மைசீலியம் வந்து காளானாக உற்பத்தியாகும்.

அறுவடை

காளான் பண்ணையை பொருத்தவரை ஒரு பயிரினை மூன்று முறை அறுவடை செய்தல் மட்டுமே நல்ல தரமாக இருக்கும் மேற்கொண்டு நான்கு மற்றும் ஐந்தாவது முறையில் அதன் தரம் குறைந்து வாடிக்கையாளரிடம் நன்மதிப்பை இழக்க நேரிடும். ஒவ்வொரு பேக்கிலும் சுமார்
1.5 கிலோ முதல் 2.5 கிலோ வரை அறுவடை செய்யலாம் இதில் எடையை பொருத்த வரை சுற்றப்புறம் மற்றும் கலவை இரண்டும் மிக முக்கியம் என்று தெரிவித்தார். தற்போது உதகையில் சுற்றுப்புறச் சூழல் மிகுந்த மாசு அடைந்து வருவதாக புகாரும் தெரிவித்தார். (மரங்கள் குறைந்து வருவது, அதிக வாகனப் போக்குவரத்து, மக்கள் தொகை, மழை வரத்து குறைவு, வெயிலின் தாக்கமும் அதிகம்) அதேபோல் வெய்யில் மற்றும் பனிக்காலங்களில் உற்பத்தி தொய்வாகவே இருக்கும் என்றும் தெரிவித்தார். இதை தவிர்க்கும் வழிமுறையாக ய­ட் அமைக்காமல் கட்டிடங்களில் பண்ணையை அமைத்தால் உற்பத்தி குறைவைத் தவிர்க்கலாம் என்றார். காளான் உற்பத்தியில் இயற்கையின் பங்களிப்பு அதிகம். தேவைப்படும் அதிக வெயில் லேசான மழை இது காளான் வளர்பதற்கு உகந்த சீதோசணம்.

சந்தை படுத்துதல்

பொதுவாக காய்கறிகளில் பூச்சி மருந்து மற்றும் பலா வேதிப் பொருட்கள் பயன்படுத்தி சந்தைக்கு கொண்டுவரப்படும், ஆனால் காளானை அப்படி நாங்கள் செய்வதில்லை. உள்நாட்டிலேயே தேவை அதிகமாக இருக்கின்றது மேலும் ஏற்றுமதி செய்வதற்கு அதிக செலவுகள் ஆகும் உதாரணமாக : ஸ்டெர்லைட் செய்தல் வேண்டும் – 120 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தில் பதப்படுத்துதல் (Pasturate என்றால் 60 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தில் பாப்படுத்துதல்) வைட்டமின் என்று பார்க்கும் பொழுது புரோட்டீன் மற்றம் பைப்பர் (Protein & Fibre)அதிகமாக உள்ளது இதில் கொழுப்பு சத்து அறவே இல்லை நீரின் அளவு 96 % மீதி உள்ள 4% சாலிட் (Solid). இங்கு முக்கிய குறிப்பாக உற்பத்தி பொருத்தே வாடிக்கையாளர்கள் அமைவார்கள் ஒரே மாதிரியாக உற்பத்தியை வைத்துக் கொள்ளுதல் அவசியம். இதில் முதலீடு என்பதும் தொழிலாளர்கள் மறுபுறமும் வைத்தே காளான் பண்ணையை அமைக்க வேண்டும். இதில் ஒரு நாள் கூட எந்த ஒரு வேலையையும் தள்ளிப் போட இயலாது. அது தொடருமே ஆனால் வாடிக்கையாளர், தரம் போன்ற எண்ணற்ற இழப்புகள் நேரிடும். பலரும்இது போன்ற காரணங்களாலேயே நஷ்டத்தை தழுவியுள்ளனர். இதைAgli under Industrial setup என்றும் கூறலாம். எந்த சூழ்நிலையிலுரும் எந்த ஒரு வேலையையும் நாட்கடத்த முடியாது என்பதன் பொருளாகும், விலை நிர்ணயம் என்பது உற்பத்தியின் அளவு, சந்தையில் தேவையின் அளவு போன்ற அனைத்தையும் கருத்தில் கொண்டு 5 பெரிய நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து விலை
நிர்ணயம் செய்து வருவதாக தெரிவித்தார்.

விலை விபரம்: (Whole Sale rate)

I Grade – Rs.150/- kg
II Grade – Rs.130/- kg
III Grade – Rs. 80/- kg

இறுதியாக சில முக்கிய குறிப்புகள், அதிகமாக தொழில் யுக்திகளை கையாளத் தெரிய வேண்டும், அனுபவம், தொழில் நுட்பம் மற்றும் ரா மெட்டீரியல் (Raw Material) கவனமாக வாங்குதல், ஆய்வு மேற்கொள்ளுதல் போன்றவற்றில் கவனம் செலுத்துதல் இன்றியமையாதது என்றும் சிலர் மூகூர்த்தம் மற்றும் விசே­ சமயங்களில் இருக்கும் தேவையைப் பார்த்து தொழில் ஆரம்பிக்கின்றனர். ஆனால் வருடம் முழுவதும் தேவை இருக்குமாறு வாடிக்கையாளர்களை அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். அதே போல் சுமார் 1 டன் என்ற அளவில் ஒரு நாளுக்கு உற்பத்தி செய்வது பயன் தரக்கூடியது இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டே தொழில் தொடங்குவது உத்தமம்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Ad spp3
Website Square Vanavil2
Website Square Ad spp1
Website Square Ad spp2
Website Square Vanavil 1