குன்னூர் லாம்ஸ்ராக் காட்சிமுனைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

 Monday, February 18, 2019  01:48 PM

குன்னூர் லாம்ஸ்ராக் காட்சிமுனையில் இயற்கை காட்சிகள் வசீகரிப்பதால் இதனைக் கண்டு ரசிக்க வெள்ளிக் கிழமை சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனர்.


Vanavil New1
குன்னூர் லாம்ஸ்ராக் காட்சிமுனையில் இருந்து பர்லியார், மேட்டுப்பாளையம், பகாசுரன்மலை உள்பட சுற்றுப்புற பகுதிகளின் இயற்கை காட்சிகள் சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கிறது. மேகமூட்டம் இருக்கும் காலங்களில் இங்கிருந்து பெரும்பாலான இயற்கைக் காட்சிகளை ரசிக்க முடியாமல் இருந்தது.

தற்போது பனிப் பொழிவு அதிகரித்துள்ளதால் இதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நீல வானத்துடன் கூடிய இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது. இதனால் இங்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.


Vanavil NEw2



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2