சின்னாறு வனப்பகுதியில் யானை சவாரி; சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

 Friday, February 15, 2019  04:41 PM

உடுமலை அடுத்த சின்னாறு பகுதியில், சுற்றுலாப்பயணிகளைக் கவரும் வகையில் யானை சவாரி துவக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த, ஆழியாறு வனப்பகுதியில், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கச் செய்யும் வகையில், யானை சவாரி துவங்கப்பட்டது. வனப்பகுதிக்குள் சுமார், 3 கி.மி., துாரம் பயணிக்கும் யானையின் மீது சவாரி செய்ய, நபர் ஒருவருக்கு, 200 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்சிலிப் பகுதியில், பல ஆண்டுகளாக, யானை சவாரி நடத்தப்பட்டு வரும் நிலையில், ஆழியாறு வனப்பகுதியிலும் யானை சவாரி துவக்கப்பட்டிருப்பது, சுற்றுலாப்பயணிகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Vanavil New1

அதேபோல், உடுமலை அடுத்த சின்னாறு வனப்பகுதியிலும், யானை சவாரி துவக்க, சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.யானை சவாரி துவக்கப்பட்டால், கேரளா மாநிலம் செல்லும் மூணாறு மற்றும் மறையூர் பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பலரும், சின்னாறுக்கு வர வாய்ப்புள்ளது. அதனால், வனத்துறையினருக்கு அதிக வருவாயும் கிடைக்கப் பெறும்.

சுற்றுலாப்பயணிகள் கூறியதாவது: உடுமலை அருகே, திருமூர்த்திமலை, அமராவதி அணை உள்ளிட்ட பகுதிகள், முக்கிய சுற்றுலாத் தலங்களாக உள்ளன. இருப்பினும், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது.அதேசமயம், சின்னாறு வனத்தில், பரிசல் சவாரி துவக்கப்பட்டுள்ளதால், இயற்கையின் அழகை ரசிக்க முடிகிறது. அதேபோல், யானை சவாரியும் துவக்கினால், சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைவர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2