வாங்க ஆனைகட்டி பையோஸ்பியர் இயற்கை பூங்காவுக்கு போவோம்...

 Thursday, February 14, 2019  08:30 PM  1 Comments

ஆனைகட்டி நீலகிரி பையோஸ்பியர் இயற்கை பூங்கா 1986 ஆம் ஆண்டு கோவையில் உள்ள தாவரங்கள் மற்றும் மரங்களை பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட விலங்கியல் பூங்காவாகும். இந்த இயற்கை பூங்கா தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம் 1975 கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வமைப்பின் முக்கிய நோக்கம் நீலகிரி மலைத் தொடரில் உள்ள உயிரினத்தின் இயல்பான மரபு பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். இந்த பூங்கா மக்களை, குறிப்பாக பள்ளி மாணவர்களை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.

இப்பகுதியைச் சுற்றிலும், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 480 இன தாவரங்கள் உள்ளன. இதில் 85 இனங்கள் நீலகிரி பையோஸ்பியர் பூங்காவில் மட்டுமே காணப்படுகின்றன. இந்த 85 இன தாவரங்களில் சுமார் 30 சதவிகிதம் காடுகளில் ஆபத்துகள் நிறைந்த வியக்கத்தக்க பகுதியில் உள்ளன என்று கூறப்படுகிறது. தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் லக்னோ, இந்தியா மற்றும் பொட்டானிக்கல் கார்டன் கன்சர்வேஷன் இன்டர்நேஷனல் (பி.ஜி.சி.ஐ) இங்கிலாந்து ஆகியவற்றால் அச்சுறுத்தப்பட்ட தாவர வகைகளை நீலகிரி பையோஸ்பியர் பூங்கா கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவையிலிருந்து 35 கி மீ தூரத்தில் ஆனைகட்டி என்ற ஊருக்குப் பக்கத்தில் இந்த நீலகிரி பயோஸ்பியர் இயற்கை பூங்கா அமைந்துள்ளது. சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மலை பூங்காவில் கிட்டத்தட்ட 240 நாட்டுமரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மிகவேகமாக அழிந்துகொண்டு வரும் சாம்பிராணி மரம், திருவோடுமரம் போன்ற அரிய மரங்களும் இங்கு காப்பாற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Vanavil New1

இம்மையமானது பலவகைகளில் தென்னிந்தியாவின் சுற்றுச் சூழலையும் புவிச்சூழலையும் சமன் செய்து வெப்பத்தின் தாக்கத்தை குறைத்து மழை பொழிவை அதிகரிக்க செய்கிறது.

ஆனைகட்டி நீலகிரி பையோஸ்பியர் இயற்கை பூங்காவை குடும்பத்தோடு கண்டுகளிக்க வரும் இயற்கை ஆர்வலர்களுக்கு கூடுதலான ஒரு தகவல் தயானந்த சரஸ்வதி அவர்களின் ஆசிரமமும் சலீம் அலியின் பறவை சரணாலயமும் அருகாமையிலேயே உள்ளன.

விடுமுறை நாட்களை பயனுள்ளதாக கழிக்க விரும்பும் மாணவர்கள், மற்றும் பொதுமக்களுக்கு கோவை நீலகிரி பையோஸ்பியர் இயற்கை பூங்கா ஒரு சிறந்த சுற்றுலாத் தளமாக அமையும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


Tamil Arasan Tamil Arasan commented on 3 month(s) ago
correct anakatty ku pakuthu etha area

Website Square Vanavil2