நம்ம ஊரு சமையல் : காரக் கொழுக்கட்டை செய்முறை

 Tuesday, February 12, 2019  07:30 PM

விநாயகர் சதுர்த்தி சிறப்பு உணவாக நேற்று அரிசி மாவில் செய்யப்படும் இனிப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்த்தோம். இன்று காரக்கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

அரிசி – 500 கிராம்
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மிளகு – இரண்டு தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 5

Vanavil New1
சின்ன வெங்காயம் – 200 கிராம்
உப்பு, எண்ணை – தேவையான அளாவு
கறிவேப்பிலை – சிறிதளவு

அரிசியை ஊறவைத்து மிககுறைவாக தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணை ஊற்றி (எண்ணை சற்று அதிகம் ஊற்றவும் ஏனென்றால் அதில் மாவை வதக்க வேண்டும்) அதில் சீரகம், மிளகை போடவும். மிளகு வெடித்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு வதக்கவும்.

மாவை கொட்டி நன்கு கிளறவும். தேவையான உப்பு சேர்கக்வும். மாவில் இருக்கும் ஈரப்பதம் ஓரளவு குறைந்ததும் மாவு இறுக்கமாக ஆகும்போது அடுப்பில் இருந்து இறக்கி, மாவை கைகளால் அழுத்தி கொழுககட்டையாக பிடித்து அதை இட்லி பாத்திரத்தில் ஆவியில் வைத்து வேகவைத்து எடுத்தால் சுவையான கார கொழுக்கட்டை தயார்.






Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2