என் மூளையை யாரோ திருடிட்டாங்க!' கமிஷனர் அலுவலகத்தில் முதியவர் மனு

 Tuesday, February 12, 2019  12:30 PM

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று புகார் அளிக்க வந்த முதியவர் ஒருவர், 'என் மூளையை யாரோ திருடிட்டாங்க...' என, அலறியதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று மதியம், ஒரு முதியவர் கையில் மனுவுடன் வந்தார். பிரதான அலுவலகம் வழியாக உள்ளே சென்றவர், அங்குள்ள வரவேற்பாளரிடம் கையில் இருந்த மனுவை கொடுத்தார்.

வரவேற்பாளர் அந்த மனுவை வாங்கி பதிவு செய்து கொண்டிருந்தார். அப்போது விறுவிறுவென, படிக்கட்டு வழியாக முதல் தளத்துக்கு முதியவர் ஏறி சென்றார். அவரை பின்தொடர்ந்து சென்ற போலீசார், முதியவரை முதல் தளத்தில் தடுத்து நிறுத்தினர்.அப்போது, 'என் மூளையை யாரோ திருடிட்டாங்க. அதை கண்டுபிடிச்சு குடுங்க.

Vanavil New1

இது சம்பந்தமா உடனடியா நான் போலீஸ் கமிஷனர பார்த்து புகார் குடுக்கணும்' என்றார் அவர்.அதிர்ச்சியடைந்த போலீசார், அவரிடம் விசாரித்தனர். விசாரணையில், 'ராமநாதபுரத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணமூர்த்தி, 56 என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், முதியவரை கமிஷனர் அலுவலகத்தின் வெளியே அழைத்து சென்று, அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவத்தால், நேற்று மதியம் கமிஷனர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2