மாநில சிலம்பம் போட்டி கோவைக்கு 17 பதக்கம்; கோவை புலியகுளம் சிலம்பாலயா கிளப் அசத்தல்

 Tuesday, February 12, 2019  10:30 AM

மாநில அளவில் சிலம்பம் போட்டியில், கோவை புலியகுளம் சிலம்பாலயா கிளப் அணிக்கு 9 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்கள் கிடைத்தன.


Vanavil New1
நாமக்கல் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.,கல்லுாரி சார்பில், 15வது தேசிய அளவிலான சிலம்பம் போட்டி, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. நாடு முழுவதிலுமிருந்து, 900 வீரர்கள் பங்கேற்றனர்.ஒற்றையர், இரட்டையர், நெடுங்கம்பு, சுருள் வாள்வீச்சு, மான்கொம்பு, குழு ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.

வெற்றி பெற்ற வீரர்கள்:சப் ஜூனியர்- எஸ்.பி.ஓ.ஏ.,பள்ளியின் ஸ்ரீவர்சன், புனித அந்தோணியார் பள்ளியின் சைனிரிச், மோனேஷ்; ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியின் பிரியதர்ஷினி, சாருகேந்தினி.கேந்திரியா பள்ளியின் பூஜா; ஒய்.டபிள்யூ.ஏ., பள்ளியின் பிரிஸ்சில்லா ஏஞ்சல்; ஏ.எல்.ஜி.,பள்ளியின் கிருஷ்ணகுமார்; எஸ்.என்.ஆர்.,கல்லுாரியின் நிவேதிதா ஆகியோர் மான்கொம்பு, நேரடி, சுருள் வாள்வீச்சு, ஆகிய பிரிவுகளில் 9 தங்கமும், 3 வெள்ளியும், 7 வெண்கல பதக்கங்களும் பெற்றனர்.புலியகுளம் சிலம்பாலயா கிளப் தலைவர் செல்வக்குமார், பயிற்சியாளர்கள் சரண்ராஜ், ரஞ்சித்குமார் ஆகியோர், வெற்றி பெற்றவர்களை பாராட்டினர்.






Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2