கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, சுத்திகரிக்கும் மறுசுழற்சிக்கூடம்


Source: dinamalar
 Tuesday, February 12, 2019  10:30 AM

கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, சுத்திகரிக்கும் மறுசுழற்சிக்கூடம், முழு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர், சேலம் உட்பட, 94 ஸ்டேஷன்கள் உள்ளன. இதில், கோவை, ஈரோடு, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில், ரயில்கள் பராமரிக்கும் பணி நடந்து வருகிறது.கோவை ரயில்வே பணிமனையில், ரயில்களை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும், ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர், தினமும் கழிவுநீராக வெளியேறி வந்தது.

Vanavil New1

இந்த தண்ணீரை மறுசுழற்சி செய்து, மீண்டும் பயன்படுத்தும் திட்டத்துக்கான பணி கடந்தாண்டு துவங்கியது. சேலம் கோட்டத்தில் முதன் முறையாக, 1.2 கோடி ரூபாய் மதிப்பில், நடந்து வந்த கழிவுநீர் மறுசுழற்சிக்கூடம், தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இதன்படி, 'பயோ கெமிக்கல் பிராசஸ்' மூலம் தினமும், 4 லட்சம் லிட்டர் கழிவுநீரை மறுசுழற்சி செய்து, பயன்படுத்த முடியும்.இச்சுத்திகரிப்பு நீர், பெட்டிகளை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


Vanavil NEw2



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

SNS_Sq2
Website Square Vanavil2
SNS_Sq1