பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதியில் தீ பிடித்ததால், அங்கிருந்த மரங்கள் எரிந்து சாம்பலாகின.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான காட்டுப்பகுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிறிது நேரத்தில், தீ மளமளவென பரவியதால் அங்கிருந்த மரங்கள் எரிந்து சாம்பலாகின.
இந்த தீயை அணைக்க பல்கலைக்கழகஊழியர்கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் போராடினர். இந்நிலையில் இரண்டு மணி போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இச்சம்பவத்தால் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் பரபரப்புடன் காணப்பட்டது.