குன்னூரில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

 Tuesday, February 12, 2019  07:06 AM

குன்னூரில் கடும் பனிப் பொழிவு நீடித்து தேயிலை செடிகள் கருகிய நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் பெய்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.

குன்னூரில் ஜனவரி முதல் வாரத்தில் துவங்கிய கடும் பனிப்பொழிவு கடந்த ஒருமாதம் நீடித்தது. இதனால் தேயிலைச் செடிகள் கருகி மகசூல் பாதிக்கப்பட்டது. அதேபோல், செடி, கொடி, புற்கள் கருகியதால் கால்நடைகள் தீவனமின்றி பாதிக்கப்பட்டன. பனிப்பொழிவு பிப்ரவரி இறுதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

Vanavil New1
இந்நிலையில், குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலையில் பலத்த மழை பெய்தது. இரண்டு மணி நேரம் பெய்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோத்தகிரியில் சாரல் மழை பெய்தது. மழை தொடர்ந்தால், தேயிலை செடி, மலைக் காய்கறி தோட்டங்களுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், வனங்களும் பசுமைக்கு மாறி வன விலங்குகளுக்கு, குடிநீர் தேவை பூர்த்தியாகும் என விவசாயிகள் தெரிவித்தனர்.


Vanavil NEw2



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

SNS_Sq2
SNS_Sq1
Website Square Vanavil2