தேசிய அளவிலான இளைஞர் பார்லிமென்ட் போட்டி; அவினாசிலிங்கம் பல்கலை மாணவி ஐஸ்வர்யா தேர்வு


Source: dinamalar
 Monday, February 11, 2019  05:44 PM

தேசிய அளவிலான இளைஞர் பார்லிமென்ட் போட்டியில், தமிழகத்திலிருந்து, கோவையை சேர்ந்த, அவினாசிலிங்கம் பல்கலை மாணவி ஐஸ்வர்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் பொது பிரச்னைகள் அறிந்து கொள்வதோடு, அதற்கு தீர்வு காணும் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில், தேசிய இளைஞர் பார்லிமென்ட் போட்டி, புனே, எம்.ஐ.டி., பல்கலையில், கடந்த,18 ம் தேதி முதல் 20 ம் தேதி வரை நடந்தது.இதில், 10 ஆயிரம் மாணவர்கள், நாடு முழுவதும் உள்ள, 20 ஆயிரம் கல்லுாரிகளில் இருந்து பங்கேற்றனர்.


Arunhit
ஆறு சுற்றுகளாக நடந்த இப்போட்டியில், சமூக பிரச்னைகள் குறித்த தலைப்புகள் அளிக்கப்பட்டன.இதில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்துவது குறித்து, கோவை, அவினாசிலிங்கம் பல்கலை, கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை, இளங்கலை முதலாமாண்டு மாணவி ஐஸ்வர்யா தனது கருத்துகளை எடுத்துரைத்தார்.

இறுதியில், 24 மாணவர்கள், இப்போட்டியில் தேர்வு செய்யப்பட்டனர். இதில், கோவையை சேர்ந்த கல்லுாரி மாணவி ஐஸ்வர்யாவும் இடம் பெற்றுள்ளார். தமிழகத்திலிருந்து, இம்மாணவி மட்டுமே தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாணவிக்கு, அவினாசிலிங்கம் பல்கலை துணைவேந்தர் பிரேமாவதி விஜயன், பதிவாளர் கவுசல்யா, டீன் உதயசந்திரிகா மற்றும் பேராசிரியர் ஷோபா உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.


Real_Ad8

Real_Custom1


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Arunhitechsqr5
Real_Ad9
Arunsqr4
Arunhitech_sqr2
Real_Right2
Real_Right3