ஆனைகட்டி மலைகிராமத்தில் 'சின்னதம்பி'க்கு சிறப்பு பூஜை

 Monday, February 11, 2019  05:30 PM

ஆனைகட்டி அருகே மலைக்கிராமத்தில் மலைவாழ் மக்கள் காட்டு யானை 'சின்னதம்பி' நீண்ட ஆயுளுடன் வாழ, சிறப்பு பூஜை செய்தனர்.

கோவை மேற்குத் தொடர்ச்சி மலையோர கிராமங்களில் சுற்றிவந்த காட்டு யானை சின்னதம்பியை வனத்துறையினர் பிடித்து பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் விட்டனர்.

Vanavil NEw2

மலையில் இருந்து இறங்கிய சின்னதம்பி, உடுமலை உள்ளிட்ட வட்டாரங்களில் சுற்றி வருகிறது.சின்னதம்பியை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். இந்நிலையில், ஆனைகட்டி அருகே பனப்பள்ளி என்ற ஆதிவாசி கிராமத்தில் யானைகளுக்காக உள்ள கோவிலில் சின்னதம்பி நலம்பெற வேண்டிய பூஜைகள் நடக்கின்றன.

பழங்குடியின மக்கள் கூறுகையில், 'மனித - வனவிலங்கு மோதல் கடந்த சில ஆண்டுகளாகத்தான் நடந்து வருகிறது. யானைகள், மனிதர்களோடு இணக்கமாக பழகும் குணம் உடையவை. யானைகளுக்காக உருவாக்கப்பட்ட இக்கோவில் பழம் பெருமை மிக்கது. இங்கு சின்னதம்பி நீண்ட ஆயுளுடன் நன்றாக வாழ வேண்டும் என, பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன' என்றனர்.


Vanavil New1Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

SNS_Sq1
SNS_Sq2
Website Square Vanavil2