சிமெண்ட் விலை உயர்வால் கட்டுமான தொழில் முடக்கம் : ஒரு லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்


Source: dinakaran
 Monday, February 11, 2019  03:30 PM

கட்டுமான தொழிலுக்கு மூல ஆதாரமான மணல் 2 ஆண்டாக உயர்ந்த நிலையில், தற்போது சிமெண்ட் விலையும் உயர்ந்துள்ளதால் கோவை மாவட்டத்தில் கட்டுமான தொழில் முடங்கி வருகிறது.

இதனால், ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கட்டுமான தொழிலுக்கு முக்கியமானதாக மணல், சிமெண்ட், செங்கல் ஆகியவை உள்ளது. இதில், மணல் கடந்த 2 ஆண்டாக தட்டுப்பாடாக உள்ளதால், ரூ.10 ஆயிரத்திற்கு விற்று வந்த ஒரு லோடு மணல் கடந்த 2 ஆண்டாக ரூ.35 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. இதனால், கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிமெண்ட் விலை 50 கிலோ மூட்டை ரூ.340ல் இருந்து ரூ.380 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தற்போது 3 ஆயிரம் எண்ணிக்கையிலான ஒரு லோடு செங்கல் ரூ.23 ஆயிரம் முதல் ரூ.26 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. வரும் மார்ச் முதல் லோடுக்கு ரூ.2 ஆயிரம் அதிகரிக்கும் என செங்கல் உற்பத்தியாளர்கள் கூறி வருகின்றனர். இதனால், கட்டுமான தொழிலில் செலவு மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை கட்டுமான தொழில் துறையினர் கூறியதாவது:

Vanavil NEw2

ஏற்கனவே மணல் பற்றாக்குறை, மணல் விலை உயர்வு ஆகியவற்றால் கடந்த 2 ஆண்டாக கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிமெண்ட் உற்பத்தியாளர்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்தியுள்ளனர். டீசல், நிலக்கரி, எரிபொருள் விலை கடந்த 3 மாதமாக குறைந்து வரும் நிலையில், சிமெண்ட் விலையை குறைப்பதற்கு பதிலாக கடந்த சில நாட்களாக விலையை உயர்த்தியுள்ளனர்.

உயர்த்தப்பட்ட விலைக்கு சிமெண்ட் வாங்கி கட்டுமான பணிகளை மேற்கொள்ள முடியாததால் கோவை மாவட்டத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான அரசு, தனியார் நிறுவனங்கள், அபார்ட்மென்ட்கள் மற்றும் தனி வீடுகள் கட்டுமான பணியில் தொய்வு ஏற்படும், 50 சதவீதம் அளவுக்கு பணிகள் முடங்கியுள்ளது.

சிமென்ட் விலை உயர்வால் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ள கட்டுமான துறையினர் விலை குறையட்டும் என்று கட்டுமான பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வருகின்றனர். இதனால் கட்டுமான தொழிலை நம்பியுள்ள சிமெண்ட், செங்கல் லாரி உரிமையாளர்கள், லாரி ஓட்டுனர்கள், கிளீனர்கள், கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் என கோவையில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் உட்பட தமிழகத்தில் 1.20 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கட்டுமான தொழில் முடங்கினால் கட்டுமான தொழிலுக்கு பக்க பலமான கிரில் உற்பத்தி, மரச்சாமான்கள், இன்டீரியல் டெகரேஷன் பொருள்கள், சீலிங் மற்றும் ப்ளோர் பினிசிங், மின் ஒயரிங், தண்ணீர் விற்பனை ஆகிய பணிகளும் முடங்கும். மணல் விலை உயர்வால், ஏற்கனவே 20 சதவீதம் கட்டுமான செலவு அதிகரித்துள்ள நிலையில், சிமென்ட் விலை மற்றும் செங்கல் விலை உயர்வால், புதிய கட்டுமான பணிகளுக்கான திட்ட மதிப்பீடு 20 சதவீதம் மேலும் அதிகரிக்கும். சிமெண்ட் விலையை உயர்த்தியுள்ள சிமென்ட் உற்பத்தியாளர்கள் மீது மத்திய, மாநில அரசுகளும், தேசிய கொள்ளை லாப தடுப்பு ஆணையமும் நடவடிக்கை எடுத்து மற்ற மாநிலங்களின் விலைக்கேற்ப சிமென்ட் விைலயை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Vanavil New1Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

SNS_Sq2
SNS_Sq1
Website Square Vanavil2