இன்றைய தினம் - பிப்ரவரி 10

 Sunday, February 10, 2019  04:30 AM

1969 - தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு.கருணாநிதி தெரிவு செய்யப்பட்டார்.

1815 – கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் நோக்கில் பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.

1897 – மடகஸ்காரில் மதச் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய இராணுவத்தினர் போர்னியோவின் தலைநகர் பஞ்சார்மாசினைக் கைப்பற்றினர்.

1948 – இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் குளொஸ்டர் கோமகன் இளவரசர் என்றியினால் கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் திறந்து வைக்கப்பட்டது.

1964 – ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கரையில் 'மெல்பேர்ன்' என்ற விமானந்தாங்கிக் கப்பலும் 'வொயேஜர்' என்ற கடற்படைக் கப்பலும் மோதிக் கொண்டதில் 82 பேர் உயிரிழந்தனர்.

1972 – ரஃஸ் அல்-கைமா ஏழாவது அமீரகமாக ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்தது.


Vanavil New1
1996 – சதுரங்கக் கணினி 'டீப் புளூ' உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.

2013 – இந்தியாவின் அலகாபாத் நகரில் கும்பமேளா திருவிழாவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர்.

1919 – சு. ராஜம், தமிழக ஓவியர், திரைப்பட நடிகர், கருநாடக இசைக்கலைஞர் (இ. 2010) பிறந்த தினம்

1929 – நாஞ்சில் கி. மனோகரன், தமிழக அரசியல்வாதி (இ. 2000) பிறந்த தினம்

1937 – தா. கிருட்டிணன், தமிழக அரசியல்வாதி (இ. 2003) பிறந்த தினம்

1952 – லீ சியன் லூங், சிங்கப்பூரின் 3வது பிரதமர் பிறந்த தினம்

1984 – அல்போன்சு புத்திரன், இந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர், திரைப்படத் தொகுப்பாளர், திரைக்கதை ஆசிரியர் பிறந்த தினம்

1985 – மகதி, தமிழகக் கருநாடக இசைப் பாடகி பிறந்த தினம்


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2