நம்ம ஊரு சமையல் : மட்டன் தம் பிரியாணி செய்வது எப்படி?

 Friday, February 8, 2019  07:30 PM

செய்ய வேண்டிய ,சமையலில் ஆர்வம் உடையவர்களுக்கு

தேவையான பொருள்கள்

மட்டன் - 500 gms
பாசுமதி ரைஸ் - 500 gms
பெரிய வெங்காயம் - 5 பெரியது
தக்காளி –3
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன் or மிளகாய் பேஸ்ட்
புதினா,கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி
பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
தயிர் – 1 1/2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
குங்குமபூ-சிறிது
நெய் -2 டேபிள் ஸ்பூன்
ரோஸ் வாட்டர்-1 டேபிள்ஸ்பூன்
சீரகம்-1 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய் - 2 குழிகரண்டி

தாளிக்க:

கிராம்பு - 6
ஏலக்காய் – 6
பட்டை-1
பிரியாணி இலை-2
கல்பாசி –சிறிது


செய்முறை :

step1

ஒரு பாத்திரத்தில் பாசுமதி ரைஸ் ஒரு 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.இப்படி செய்தால் சாதம் மிகவும் மெதுவாக நீளமாக இருக்கும்.கொதிக்கும் நீரில் போட்டால் ஒரு 7 நிமிடத்தில் வெந்து விடும்.

step 2

மற்றொரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மட்டன் ,ஒருபெரிய வெங்காயம் நீளமாக வெட்டியது,ஒரு தக்காளி பொடியாக கட் செய்தது,தயிர்,லெமன் ஜூஸ்,இஞ்சி,பூண்டு விழுது,சிறிது புதினா ,மல்லி ,பிரியாணி மசாலா or கரம் மசாலா தூள் or தேங்காய் பூ 2 ஸ்பூன்,பட்டை,ஏலக்காய்,கிராம்பு,சோம்பு,முந்திரி பருப்பு 5 அரைத்து கலக்கவும் உப்பு.இவை அனைத்தும் கலந்து குறைத்தது 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

Vanavil New1

step 3

மீதம் உள்ள புதினா ,மல்லி கழுவி,சுத்தம் செய்து பொடியாக கட் செய்துஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்

step4
மற்றொரு கிண்ணத்தில் சுடு நீரில் குங்குமப்பூ ஊற வைக்கவும்,அதில் ஊறிய பின் 1 டேபிள்ஸ்பூன் ரோஸ் water கலந்து வைத்து கொள்ளலாம்.

step 5

கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணை ஊற்றி காய்ந்தவுடன் 3 பெரிய வெங்காயத்தை நீளமாக அரிந்து ,அதை எண்ணையில் கோல்டன் பிரவுன் கலர் வரும் வரை வதக்கி வைத்து கொள்ளவும்or உங்களிடம் fried பிரவுன் ஆனியன் இருந்தால் use செய்யலாம்.

step 6

marinate செய்து வைத்து இருக்கும் மட்டனை ,அடுப்பில் குக்கர் வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் ஒரு கிராம்பு 2,ஏலக்காய் – 2,பட்டை-1,பிரியாணி இலை-2,கல்பாசி –சிறிது போட்டு தாளித்து மீதம் உள்ள நீளமாக அரிந்த வெங்காயம் ,தக்காளி போட்டு வதக்கி,marinate பண்ணி வைத்து இருக்கும் மட்டன் போட்டு நன்றாக வதக்கி,பின் அரை கப் தண்ணீர் ஊற்றி ,உப்பு சரி பார்த்து ,குக்கரை மூடி ,ஒரு 7 or 9 விசில் விடவும்.

step 7

அதே போல் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் எடுத்த ரைசுக்கு நாலு மடங்கு தண்ணீர் எடுத்து நன்றாக தண்ணீர் கொதித்ததும் அதில் ஒரு கிராம்பு ,ஏலக்காய் – ,பட்டை-1,பிரியாணி இலை-1,கால் ஸ்பூன் நெய்,சிறிது உப்பு போட்டு,பின் அரிசி போடவேண்டும்,ஒரு 6 or 7 நிமிடத்தில் வெந்து விடும்.உதிரி உதிரியாக முக்கால் பதத்தில் இருக்கவேண்டும்.வெந்ததும் நன்றாக வடிகட்டி வைத்து கொள்ளவும்.

step 8

இப்போது ஒரு அடி மிகவும் கனமான ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளவும் அதன் அடிபகுதியில் ஒரு ஸ்பூன் நெய் தடவி அதன் பின் ரெடி செய்து வைத்து இருக்கும் மட்டன் கிரேவி ஒரு லேயர் பின் அதன் மீது ரைஸ் ஒரு லேயர் ,ரைஸ் மீது புதினா ,மல்லி,பிரவுன் ஆனியன் ,பின் குங்குமப்பூ ,ரோஸ் water கலவை சிறிது தெளிக்கவும்,பின் மறுபடியும் மட்டன் லேயர்,அதன் மீது ,ரைஸ்,ரைஸ் மீது புதினா ,மல்லி,பிரவுன் ஆனியன் ,பின் குங்குமப்பூ ,ரோஸ் water கலவை என்றும் முழுவதும் போட்டு முடித்த பின் இறுதியில் மேலே ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி ,சரியான அளவு உள்ள மூடி போட்டு அந்த பாத்திரத்தை இறுக்கமாக மூடி வைக்கவும்.

step 9

இப்போது தம் போடுவது எப்படி என்று பார்ப்போம்.
ஓவன் வைத்து இருப்பவர்கள் ,முதலில் 180 டிகிரி ஒரு 15 நிமிடம் preheat செய்து வைத்து கொள்ளவும்.இப்போது பிரியாணி உள்ள பாத்திரத்தை கீழ் அடுப்பு 20 நிமிடமும்,பின் மேல் அடுப்பு 20 நிமிடமும் வைத்தால் சரியாக இருக்கும்.

2 வது முறை ஓவன் இல்லாவிடில்,அடுப்பில் ஒரு கனமான சப்பாத்தி கல் வைத்து அதில் ஒரு அரை கப் நீர் ஊறி அதன் மேல் பாத்திரத்தை ஒரு 30 நிமிடம் சிம்மில் வைக்க வேண்டும்

3 வது முறை பாத்திரத்திற்கு பதில் குக்கரில் லேயர் போட்டு சிம்மில் ஒரு 10 இருந்து 15 நிமிடம் மிகவும் குறைந்த தீயில் வைக்க வேண்டும்.


குறிப்பு:

சிக்கன் வைத்து செய்தால் சிக்கன் தம் பிரியாணி,அப்போது குக்கரில் ஒரு 3 விசில் விட்டால் போதும்.

குங்குமப்பூ இல்லாவிடில் தவிர்த்து விடலாம்

நான் சாம் பாம்பே பிரியாணி மசாலா 1 ½ டேபிள்ஸ்பூன் use செய்தேன்,நீங்கள் உங்களிடம் ஏதாவது பிரியாணி மசாலா இருந்தால் use செய்யலாம்


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2