கோவையில் இப்படி ஒரு உணவகமா...!

 Friday, February 8, 2019  05:30 PM  2 Comments

கோவையை நினைத்து பெருமை பட பல விஷயங்கள் இருந்தாலும். நான் பெருமையாக கருதுவது பசிப்பிணி போக்கும் செயலை செய்வோரைத்தான். அதில் குறிப்பிட தகுந்த ஒரு உணவாக நிறுவனம் தான் ஹோட்டல் அன்னலட்சுமி நட்சத்திர அந்தஸ்த்து பெற்ற இந்த ஹோட்டலின் கிளைகள் கோவையில் பல இடங்களிலும், மற்றும் உலகின் பல நாடுகளிலும் உள்ளது.

அதில் கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டர் மில்ல்ஸ் பஸ் ஸ்டாப்பிற்கு அடுத்து அமைந்துள்ள கிளையில் ஒரு விசேஷம், அது என்னவென்றால் இங்கு சாப்பிட வருபவர்கள் பப்பே சிஸ்டம் என்ற வகையில் தாங்களே தங்களுக்கு தேவையான உணவுவகைகளை அதற்க்கான இடத்தில் சென்று வாங்கிக்கொண்டு மேசையில் அமர்ந்து சாப்பிடலாம். உணவருந்தி முடிக்கும் போது ஊழியர் ஒருவர் ஒரு கார்டை கொண்டுவந்து தருவார், அதை திறந்து பார்த்தல் அதனுள்ளே இருப்பவர்களிடம் பெற்றுக்கொண்டு இல்லாதோர்க்கு உணவளிக்கிறோம். தங்களால் இயன்றதை அளியுங்கள் இல்லாதொர்க்காக என்று எழுதி இருக்கும், நம்மால் இயன்றதை அந்த கார்டினுள்ளே வைத்து விட்டு வரலாம்,.

இப்படி ஒரு உணவகமா என்று நான் முதல் முறை சென்ற போது அசந்து விட்டேன், இதே உணவகத்தின் ரேஸ் கோர்ஸ் கிளையில் சாப்பாடு ஒன்று ரூபாய் 350 /- அனால் இந்த கடையில் நம்மால் முடிந்ததை கொடுத்தால் போதும், எனக்கெதிரில் அமர்ந்து சாப்பிட்டவர் மூன்று பேர் சாப்பிட்டு விட்டு ரூபாய் 2000 /- வைத்துவிட்டு போனார்,

Vanavil New1

அதை வைத்து குறைந்தது நூறு பெரிக்கவது உணவளிக்கலாம் அல்லவா, அடைத்தான் இவர்கள் சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறார்கள்,

முதலாளி இல்லாத இடம்தானே என்று ஊழியர்களோருவரும் அலட்சியமாக நடப்பதில்லை, அந்த கடையில் உணவின் தரமோ, சுவையோ, சுகதரமோ எதுவும் குறை சொல்ல முடியாது, பலதரப்பட்ட மக்களும் வந்து உணவருந்தி செல்கின்றனர், இத்தனைக்கும் இப்படி ஒரு வசதி இருப்பது கோவையிலேயே பலபேருக்கு தெரிவதில்லை, இப்படி ஒரு விஷயத்தை வலைப்பூவில் உங்களுடன் பகிர்ந்து கொள்வது பெருமையாக உள்ளது. கோவை வரும்போது இந்த உணவகத்தில் தவறாமல் உணவருந்தி உங்கள் கருத்தையும் வெளியிடுங்கள், பல பெருமைகள் கொண்ட கொங்கு மண்ணிற்கு பெருமை சேர்க்கும் ஒரு விஷயம் ஹோட்டல் அன்னலட்சுமி

ஏமாற்றத்தை தவிர்க்க பிரதி திங்கள் உணவகம் விடுமுறை.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


karthik karthik commented on 5 month(s) ago
kovai gethu
Ram Ram commented on 5 month(s) ago
Super
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2