ஜி.டி.நாயுடு - எழுதி வைத்திருந்த போர்டுகள்

 Friday, February 8, 2019  02:13 PM

'ஜி.டி.நாயுடு கண்டிப்புக்கு பெயர் பெற்றவர். அவரது பஸ் ஸ்டாண்டில், சட்ட திட்டங்கள் குறித்து எழுதி வைத்திருந்த போர்டுகள் வினோதமானவை...' :

* உள்ளே போகும் வழி!

* ஒவ்வொரு பயணியும் டிக்கெட் வாங்கிய பின், எந்த பஸ்சுக்கு வாங்கி இருக்கின்றனரோ, அந்த பஸ் புறப்படுவதை ஜாக்கிரதையாகக் கவனித்து, அந்த பஸ்சில் பயணம் செய்ய வேண்டும். அவ்விதம் அந்த பஸ்சை தவறவிட்டு விட்டால், யாதொரு காரணத்தைக் கொண்டும் டிக்கெட் பணம் வாபஸ் கொடுக்கப்பட மாட்டாது.

* சில்லரை கொடுப்பதில்லை.

* பயணம் செய்பவர்கள் மாத்திரம் இவ்விடம் தங்க வேண்டும்; பயணம் செய்யாதவர்களை இவ்விடம் கண்டால், போலீசாரிடம் ஒப்புவிக்கப்படும்.

* கான்டீன்-இங்கு வேலை செய்பவர்களுக்கு மட்டும்.

* கை கழுவும் தண்ணீர்.

* குடிக்கும் தண்ணீர்.


Vanavil NEw2
* எந்த விதமான காரணத்தைக் கொண்டும், இவ்விடம் எச்சில் துப்பவோ, வாய் கொப்பளிக்கவோ கூடாது.

* இங்கு எங்காவது எச்சில் துப்பினால், அதை நீங்களே சுத்தம் செய்ய வேண்டும்.

* இங்கே சைக்கிள் நிறுத்தக் கூடாது; வேண்டுமானால் பின்னால் ஸ்டாண்டில் நிறுத்தவும்.

* எந்த வேலையும் காலி இல்லை.

* இன்று முதல் யாருக்கும் அட்வான்ஸ் கொடுக்கப்பட மாட்டாது.

* ஒரு பொய் உன்னை வெளியேற்றி வீட்டுக்கு அனுப்பும்; ஒரு திருட்டு உன்னை ஜெயிலுக்கு அனுப்பும்.

* அஜாக்கிரதை, சோம்பேறித்தனம், சுத்தமாக செய்யாத வேலை, உன்னை பட்டினிக்கு இழுக்கும் அல்லது
உன்னை வெளியில் போகச் செய்யும்.

* வெளியே போகும் வழி.

— இவற்றில் சிலவற்றையாவது நம்ம ஊர் பஸ் ஸ்டாண்டில் எழுதி வைக்கலாம்!


Vanavil New1Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

SNS_Sq1
SNS_Sq2
Website Square Vanavil2