குக்கர் சாதமும்...சர்க்கரை நோயும்

 Thursday, February 7, 2019  01:30 PM

பொதுவாக குக்கர் சாதம் சாப்பிடும்போது உடல்நல கேடுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதைப்பற்றி இங்கு பார்ப்போம்.

இன்றைய அவசர உலகில் சமையல் நேரத்தை மிச்சப்படுத்த நவீன உபகரணங்கள் உதவியாக இருந்தாலும் அதனால் நோய்களும் வருகிறது என்பதுதான் கவலை அடைய வைக்கும் அம்சம். அந்த வகையில் குக்கர் சாதம் குறிப்பிடத்தக்கது. பொதுவாக குக்கர் சாதம் சாப்பிடும்போது உடல்நல கேடுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதைப்பற்றி இங்கு பார்ப்போம்.

இன்றைய சூழ்நிலையில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்வதால் காலையில் அலுவலகம் போகிற அவசரத்தில் விரைவில் எப்படி சமையலை முடிப்பது என கவலைப்படும் பெண்களுக்கு நவீன சமையல் உபகரணங்கள் பெரும் உதவியாக உள்ளது என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் இந்த உபகரணங்கள் மூலம் செய்யும் உணவுப்பொருட்களே சில நோய்களுக்கு காரணமாக அமைகிறது.Vanavil New1
பொதுவாக குக்கரில் சாப்பாடு செய்வது சாதாரணமான ஒன்று தான். அதனால் உடல்பருமன், சர்க்கரை நோய் வரும் அபாயம் அதிகமாக இருக்கிறது. அதாவது வடித்து சமைக்கும் சாதத்தில் 30 முதல் 40 சதவீதம் மாவுச்சத்து குறைந்து விடும். மேலும் ரத்த சர்க்கரையின் அளவை அது உடனடியாக கூட்டாது என டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால் குக்கரில் சமைக்கும்போது அந்த சத்துக்கள் சாப்பாட்டில் முழுமையாக இருந்து விடும்.

மேலும் குக்கரில் சமைக்கும் சாப்பாட்டில் கஞ்சி நீக்கப்படுவதில்லை. அதனால் கலோரி குளுக்கோஸ் அளவு அதிகம் இருப்பதானால் திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. அதேபோன்று சிலருக்கு புதிதாக சர்க்கரை நோயை உண்டு பண்ணும் அபாயமும் இருக்கிறது. மேலும் நார்சத்து நிறைந்த கஞ்சி நீக்கப்பட்ட சாதமே சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்.

அது மட்டுமல்லாமல் அரிசி வேக எவ்வளவு நேரம் எடுத்து கொள்கிறதோ அந்த அளவுக்கு சாப்பிட உடலுக்கு நல்லது. மேலும் குறைந்த நேரத்தில் வேகும் சாப்பாட்டால் பிரச்சினை தான். அதிக நேரம் வெந்த சாப்பாட்டை ஒரு கப் சாப்பிட்டாலே அது மிகவும் நல்லது. பொதுவாக வேகமாக தயாரான சாப்பாட்டை இரண்டு மடங்கு எடுத்து கொண்டால் மட்டுமே வயிறு நிரம்பும்.

இப்படி வயிற்றுக்குள் உணவை திணிக்க திணிக்க பிரச்சினைகளும் அதிகமாகும். எனவே கூடுமானவரை குக்கர் சாதம் சாப்பிடாமல் கஞ்சி வடித்த சாப்பாட்டை சாப்பிடுவதால் பல நோய்கள் நம்மை நெருங்க விடாமல் வைத்து இருக்கும். அதனால் முடிந்த வரை குக்கரில் சமைக்கும் சாதத்தை சாப்பிடுவதை தவிர்க்கலாம் என டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2