கோவையில் வி.சி.வி எனும் அற்புத மனிதர்

 Wednesday, February 6, 2019  08:30 PM

வி.சி.வெள்ளியங்கிரி கவுண்டர் வெள்ளக்கிணற்றில் நான்கு ஆண் மக்கள் கொண்ட விவசாயக் குடும்பத்தில் மூத்தவராக அக்டோபர் 28,1880ல் பிறந்தார். இவர் அந்தக் காலக்கட்டத்திலேயே “” இண்டர்மீடியட்” வரை படித்தார். விவாசயத்தில் 6000 ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணையைப் பராமரித்து வந்தார்.

தேசிய ஒருமைப்பாடு, அந்நியர் ஆட்சி, விடுதலை எனப் பல சமூக நிகழ்வுகளை நன்கு கண்டறிந்து அரசியலில் ஈடுபட்டார். இவர் மது விலக்கு, பிற்படுத்தப்பட்டோர் கல்வி, பெண் கல்வி மற்றும் எளிய திருமண முறைக்காக அரும்பாடுபட்டார். 1933ல் கோவை (நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், வட-ஆற்க்காடு) பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விவசாயிகளின் நலம்:

பருத்திச் சாகுபடி முறையில் நூதனமான வழிமுறையைக் கண்டறிந்து சாதனைபடைத்தார். இதன் மூலம் அவர் இந்திய மத்திய பருத்திக் குழுவின் தலைவரானார்.

கரும்பு, புகையிலை போன்ற பயிர்களுக்கு ஊக்கம் தந்து விவாசயிகளின் நலனில் பெரும் பங்கு வகித்தார். விவசாய கண்காட்சிகள், மாட்டுச் சந்தை போன்றவற்றைப் பல இடங்களில் நடத்தி விவசாயிகளின் வெற்றிக்கு வழி வகுத்தார். விவசாயிகள் வளர்ச்சிக்காக மேட்டுப்பாளையத்தில் “”சாரதா நிதி வங்கி”யை 1920ல் தொடங்கினார்.

சாலை வசதி மேம்பாடு:

கோவை – மேட்டுப்பாளையம் சாலை அமைக்கும் பணியில் அவர் இருபுறமும் புளிய மரங்களைத் துடியலூர் வரை நட்டும் பயணிகளின் சிரமத்தைக் குறைத்து, வசதி செய்தார்.


Vanavil New1
இவ்வாறு அரசியல் ஈடுபாட்டுடன் விவசாயி மற்றும் சாலை மேம்பாட்டு வசதிகள் செய்து கொடுத்தார்

தொழில்துறையில் இவர் பங்கு:

1936ல் “”ஞானம்பிகா மில்ஸ்” எனும் பருத்தி விதை நீக்கம் செய்யும் ஆலையை நிறுவினார். இது போன்ற ஆலைகள் அக்காலகட்டத்தில் மிகக் குறைவாக இருந்தன. இன்றையக் கோட்டை மேடு பகுதியில் தொழிற்ச்சாலை ஒன்றையும் மேட்டுப்பாளையம் பகுதியில் மலைப்பிரதேசத்திலிருந்து வரும் விவசாயிகள் தங்கள் விளைச்சல்களை விற்க ஒரு சந்தை (இன்றைய வி.சி.வி. பேட்டை) அமைத்துக் கொடுத்தார்.

1933ல் பாராளுமன்ற உறுப்பினர்.
முற்போக்குச் சமுதாயச் சிந்தனையாளர்.

(மதுவிலக்கு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண் கல்வி, எளிய திருமணம்).

விவசாய மேம்பாட்டுக் கண்காட்சி அமைப்பு.
புதிய பருத்திச் சாகுபடி அறிமுகம்.
சாரதா நிதி வங்கி தொடக்கம்.

திரு. வி.சி. வெள்ளியங்கிரி கவுண்டர் அவர்கள் 7-11-1948ல் கோவையில் கார் விபத்தில் மறைந்தார்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2