மனதை மயக்கும் கோத்தகிரி சுற்றுலா...

 Wednesday, February 6, 2019  04:30 PM

இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது கோத்தகிரி சுற்றுலா. நீலகிரியில் உள்ள மிகவும் பழமையான மற்றும் மூன்றாவது மழை வாழ்விடமாக கோத்தகிரி விளங்குகிறது. இந்த இடத்திற்கு இப்பெயர் வரக்காரணம் கோத்தர் என்னும் பழங்குடி மக்கள் இந்த இடத்தில் இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது. கோத்தர் இன மக்கள் கோத்த என்னும் மொழி பேசுவர். இந்த மொழி திராவிட மொழிகளில் ஒன்றாகும்.கோத்தகிரி கடல்மட்டத்திலிருந்து 5882 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

கோத்தகிரி பயணம் செய்யும்போது தேயிலைத் தோட்டங்கள் மற்றும் அழகிய பச்சை நிலப்பகுதிகளையும் நாம் காணலாம். இங்கு தேயிலை தொழில் மிகவும் முக்கிய தொழிலாக உள்ளது.

கோத்தகிரி சுற்றுலா இடங்கள் :

கொடநாடு வியூ பாயிண்ட்

கோத்தகிரி வரும் சுற்றுலா பயணிகள் இந்த இடத்தில் வந்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். கோத்தகிரியில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது.

எல் நீர்வீழ்ச்சி :

கோத்தகிரியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் வந்து செல்ல சிறப்பான இடமாக இது உள்ளது.


Vanavil New1
செயின்ட் கேத்தரின் நீர்வீழ்ச்சி :

இந்த நீர்வீழ்ச்சி கோத்தகிரியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கோத்தகிரி வரும் சுற்றுலா பயணிகள் இந்த இடத்திற்கு வந்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

லாங்வுட் ஷோலா

இந்த வனப்பகுதி கோத்தகிரியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் இங்கு வந்து புகைப்படம் எடுத்துச் செல்லலாம்.

ரங்கஸ்வாமி சிகரம் மற்றும் தூண்

கோத்தகிரி அருகிலுள்ள முக்கியமான சுற்றுலா தளங்கள் இதுவும் ஒன்று. இந்த இடம் கோத்தகிரியில் உள்ள மற்ற இடங்களைக் காட்டிலும் வேறு அனுபவத்தைத் தரும். கோத்தகிரி வரும் சுற்றுலா பயணிகள் இந்த இடத்திற்கு வந்து செல்வது நன்றாக இருக்கும்.

கோத்தகிரி செல்ல சிறந்த மாதம்

டிசம்பர் இருந்து மே மாதம் வரை இங்கு காலநிலை மிக நன்றாக இருக்கும். கோத்தகிரியில் முக்கியமான விழாக்களாக பொங்கல், கணேஷ் சதுர்த்தி, தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2