சிறப்பாக முடிந்த Target Zero-வின் 34-வது வார களப்பணி

 Tuesday, February 5, 2019  11:30 AM

பிளாஸ்டிக் மீதான தடையினை அடுத்து மக்களிடையே பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பதை குறித்து விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டம் ஆழியாறு - வால்பாறை வனப்பகுதிகளில் Target Zero அமைப்பு இளைஞர்கள் குழு பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற களம் இறங்கியுள்ளனர். மிகபெரிய சவாலாக இருக்கும் இந்த பிளாஸ்டிக் ஒழிப்பு களப்பணியை கையில் எடுத்து கடந்த 33 வாரங்களாக செயல்படுத்தி வருகிறது.. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 34-வது வாரமாக முதலாவது கொண்டை ஊசி வளைவு அருகே களப்பணியினை மேற்கொண்டனர்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை அப்புறப்படுத்தினர்.

இக்களப்பணியினை குறித்து Target Zero பாலா அவர்கள் கூறியதாவது...

டார்கெட் ஜூரோ குழுவின் 34 வது வார களப்பணி இன்று மிகச்சிறப்பாக சென்னை டிரக்கிங் கிளப்பின் அங்கமான ஐந்திணை என்ற அமைப்பின் சார்பில் 25 தன்னார்வலர்கள் டார்கெட் ஜூரோ குழுவுடன் இணைந்து களப்பணியாற்றினார்கள்..

இன்றைய தினம் மூன்று மழை நீர் வாய்க்கால்களை தூய்மைபடுத்தினோம்... மேலும் 25 பைகளில் பிளாஸ்டிக், வாட்டர் கேன், மது பாட்டில்களை முழுமையாக அகற்றினோம்...

Vanavil New1

சென்னை தோழர்களின் களப்பணி மிகவும் உற்சாகத்தை நம்பிக்கை அளித்தது... மிகவும சவாலான பணியையும் அசாத்தியமாக செய்தார்கள் நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத ஓன்று... ஒரு குறுகிய மழை நீர் வாய்க்கால் ஊடே சென்று தூய்மைபடுத்தினார்கள்...

வனத்தில் வெயில் கால தாக்கம் தென்பட தொடங்கி விட்டது... அணையில் நீர் வரத்து குறைந்து விட்டது... இனிமேல் தான் நீரின் அருமை நமக்கு தெரியும்...

இதே பொல தொடர்ந்து பயணிப்போம் ஒரே போல் எண்ணம் கொண்ட தோழர்களுடன் ஒருமித்து இயங்குவோம்...இலக்கை அடையும் வரை....

#Target_Zer0 #Plastic_Free_Forest_Zone

இணைந்து களப்பணியாற்ற தொடர்பு கொள்ளவும் 97154 05653






Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2