ஆரோக்கிய சமையல் : வாவல் மீன் குழம்பு: எளிய முறை..

 Sunday, February 3, 2019  03:30 PM

வாவல் மீன்...1/2 கிலோ

சின்ன வெங்காயம்,,15
தக்காளி..................3
பச்சை மிளகாய்.......3
பூண்டு....................12 பல்
இஞ்சி...................... 1/2 இஞ்ச நீளம்
சீரகம்.......................1/2 தேக்கரண்டி.
மிளகாய் பொடி...1 தேக்கரண்டி.
மல்லி பொடி........1 தேக்கரண்டி.
மஞ்சள் பொடி.......கொஞ்சம்
தேங்காய்...............1 /4 மூடி
புளி.......................... எலுமிச்சை அளவு
உப்பு.........................தேவையான அளவு
கறிவேப்பிலை..........ஒரு கொத்து
எண்ணெய்.................2 தேக்கரண்டி
கருவடாம்/வெந்தயம்..1 தேக்கரண்டி

செய்முறை:

புளியை முடிந்தால் அரிசி கழுவிய கழுநீர் ஊற்றி ஊறவைத்து, நன்கு கெட்டியாக கரைத்து வைக்கவும்.
வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும்.

Vanavil New1

மீனை நன்கு கழுவி.. கொஞ்சம் மஞ்சள்பொடி+உப்பு போட்டு பிசைந்து 10 நிமிடம் ஊறவைத்துப் பின்பும் கழுவவும்.
சீரகம்+ 7 வெங்காயம் வைத்து நன்கு அரைக்கவும்.

இஞ்சி+ 6 பூண்டு பல் வைத்து அரைக்கவும்.
மீதி பூண்டை நன்கு தட்டி வைத்துக்கொள்ளவும்.
மீதி வெங்காயத்தை நைசாக நறுக்கி வைக்கவும்.
பச்சை மிளகாய், தக்காளியை நறுக்கவும் .
தேங்காயை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து, மூன்று பால் எடுக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,கருவடாம்+ வெந்தயம் போட்டு சிவந்ததும்/வாசனை வந்ததும், உடனே, நறுக்கிய வெங்காயம்+பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

அதிலேயே, தட்டிய பூண்டில் பாதியை போட்டு வதக்கி. அதனுடன் நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும் .

பின்னர் அதில் மிளகாய்பொடி, மல்லிப் பொடி +மஞ்சள் பொடி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

பின் அதிலேயே, கரைத்த புளி+உப்பு போடவும்.
பின்னர் அதில். இரண்டாவது, மூன்றாவது தேங்காய்ப்பாலை ஊற்றவும்.
குழம்பு நன்கு கொதித்த பின், மீனை அதில் போடவும்.
மீன் போட்ட 10 நிமிடத்திற்குள் குழம்பு சாப்பிரெடி.

அதில் மீதமுள்ள முதல் பாலை ஊற்றி கொதித்ததும், கறிவேப்பிலை +தட்டிய பூண்டு போட்டு இறக்கி விடவும்..!

புவாவல் மீன் குழம்பு , இட்லிக்கு செம ஜோரான ஜோடி..! தோசை, சப்பாத்தி,பூரி மற்றும் சாதத்திற்கும் சேர்த்து சாப்பிடலாம்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2