நாளை தொடர்கிறது Target Zero-வின் 34-வது வார களப்பணி; இடம் முதலாம் கொண்டை ஊசி வளைவு

 Saturday, February 2, 2019  04:30 PM

ஆழியார் - வால்பாறை மலை பகுதியில் உள்ள சாலையோரத்தில் வீசப்பட்ட மக்காத குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியை டார்கெட் ஜூரோ அமைப்பு இளைஞர்கள் கடந்த 33-வாரங்களாக செய்து வருகின்றனர்.

பிளாஸ்ட்டிக் ஒழிப்பு என்ற ஒற்றை நோக்கத்துடன் கடும் விடாமுயற்சியுடன் களப்பிணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை முதல் மதியம் வரை அனைவரும் பைக் வாக் முறையில் பிளாஸ்டிக் கழுவுகள் மற்றும் மக்காத குப்பைகளை அகற்றி வருகின்றனர்.

இந்த வார டார்கெட் ஜூரோவின் களப்பணி - நாளை ஞாயிற்றுக்கிழமை *03/02/2019 டார்கெட் ஜூரோ குழுவின் சார்பில் வால்பாறை வன சாலையில் முதலாம் கொண்டை ஊசி வளைவில் நடைபெற உள்ளது. இக்களப்பணி காலை 7 மணி முதல் மதியம் 3 மணி வரை நடக்கும்.

இது குறித்து பாலா அவர்கள் கூறியதாவது....

Vanavil New1

டார்கெட் ஜூரோ குழுவின் தொடர்ச்சியாக நடைபெற இருக்கும் 34 வது வார களப்பணிக்கு வாய்ப்பும் விருப்பமும் உள்ள நண்பர்கள் வந்து கலந்து கொள்ளலாம்...

இந்த வாரம் சென்னையில் இருந்து ஐந்திணை அமைப்பை சார்ந்த தோழர்கள் சுமார் பதினைந்து பேர் வந்து கலந்து கொள்வதாக உறுதியளித்துள்ளார்கள்... அவர்களின் வருகை மேலும் எங்களை ஊக்கப்படுத்தும்...

இணைந்து களப்பணியாற்ற தொடர்பு கொள்ளவும் 97154 05653Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2