நம்ம ஊரு சமையல் : சுண்டைக்காய் கார குழம்பு....!

 Thursday, January 31, 2019  07:30 PM

சுண்டைக்காய் பயன்கள் :

ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புசளி, காசநோய் நோய் கட்டுப்படும். இது வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கும் இயல்புடையது. மூலத்தில் ஏற்படும் கடுப்பு, மூலச்சூடு மற்றும் வயிற்று கோளாறுகளுக்கும் சிறந்த மருந்தாகின்றது.

குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்க சுண்டைக்காய் உதவும். குழந்தையாக இருக்கும்போதே அவர்களுக்கு சுண்டைக்காயை உணவில் சேர்த்து, சாப்பிட பழக்கவேண்டும். சுண்டைக்காயை மாதம் இருமுறை உணவில் சேர்த்துக்கொண்டால், வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிக்கப்பட்டுவிடும்.

சுண்டைக்காயில் உள்ள கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்க செய்யும். சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் சுண்டை வற்றலை பயன்படுத்தலாம்.

சுண்டைக்காய் கார குழம்பு சூப்பராக இருக்கும். பச்சை சுண்டைக்காய் சின்ன வெங்காயம் வைத்து கார குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பச்சை சுண்டைக்காய்,
சின்ன வெங்காயம் - தலா 10,
கீறிய பச்சை மிளகாய் - 2,
கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்,
புளி - சிறிய எலுமிச்சை அளவு,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
தக்காளி - 2,
வேகவைத்து, மசித்த துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,

Vanavil New1
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

* பச்சை சுண்டைக்காயை ஒன்றிரண்டாக நசுக்கி, தயிரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

* சின்ன வெங்காயத்தை தோல் உரிக்கவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* புளியை கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும்.

* தக்காளியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும்.

* மண்சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.

* வெங்காயம் சற்று வதங்கிய பின்னர் ஊறவைத்த சுண்டைக்காயை தயிர் நீக்கி சேர்த்து மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும்.

* அடுத்து அதில் அரைத்த தக்காளி விழுது, தேவையான உப்பு சேர்த்து மேலும் வதக்கவும்.

* இப்போது புளிக்கரைசல், வேகவைத்து மசித்த துவரம்பருப்பு சேர்த்து, நன்றாக கொதி வந்த பின் கொத்தமல்லித்தழை தூவி, இறக்கிப் பரிமாறவும்.

* பச்சை சுண்டைக்காய் குழம்பு ரெடி.


Vanavil NEw2



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

SNS_Sq2
Website Square Vanavil2
SNS_Sq1