தெரிந்த கொடைக்கானல் – தெரியாத சுவாரசியங்கள்! சுற்றுலா செல்வோர் பார்க்க வேண்டிய இடங்கள்!

 Tuesday, January 29, 2019  03:30 PM

தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள கொடைக்கானல், மலைகளின் இளவரசி என்றழைக்கப் படுகிறது. தற்போது நாம் காணும் இந்த கொடைக்கானல் நகரம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப் பட்டது. பிரையண்ட் பூங்கா, தேவாலயங்கள், நடைபாதைச் சாலை, ஏரி இவையெல்லாம் அவர்களால் உருவாக்கப்பட்டவை.

தொப்பி துாக்கும் பாறை, இரட்டை துாண்கள் போலத் தென்படும் மலைகள், குணா குகை, 500 ஆண்டு பழமையான மரம், குறிஞ்சி ஆண்டவர் கோயில் என, சுற்றுலா பயணிகளுக்காக பெரிய லிஸ்டே இருக்கிறது. காணல் என்பது ஒரு வகைச் செடி. அது இந்த மலையில் அதிகம் காணப்படும் ஒரு தாவர வகை. இந்த தாவரம், மாடுகளுக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. அதனால், இந்த ஊர் கோடை வாசஸ்தலம் என்பதால், கொடைக்கானல் என்ற பெயர் ஆனது.

இந்த கொடைக்கானலைப் போல, இந்த மலையைச் சுற்றிலும், கடியங்கானல், தாமற்சாலை வஞ்சன் கானல், கொச்சிகானல் போன்ற பல பகுதிகள் உள்ளன. சங்க காலத்தில் புகழ் பெற்ற குறிஞ்சி மலர்கள், இந்த மலையில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கின்றன. தற்போது காணும் கொடைக்கானலுக்கு முன்பாக, இந்த ஊர் இருந்த பகுதி வேடப்பட்டி என்ற ஊரைச் சார்ந்ததாக இருந்தது. அந்த ஊர், தற்போது ஆதி கொடைக்கானல் என்றழைக்கப் படுகிறது.

இது தான், ஆதியான கொடைக்கானல் நகரம். பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், மன்னர்கள் கோடை காலத்தில் இந்தப் பகுதிக்கு வருகை தந்துள்னர். கடியன் நெடு வேட்டுவன் என்பவன், இந்தக் கோடை மலைக்கு தலைவனாக இருந்தான், என்று புறநானுாற்றில் குறிப்பிடப் பட்டுள்ளனது.

பண்ணி என்ற குறுநில மன்னனும், இந்த கோடை நகரில் ஆட்சி செய்துள்ளான் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இவர்கள் ஆட்சி செய்த ஆதி கொடைக்கானல் எனப்படும் வில்பட்டியில், 18-ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்த, குறிஞ்சிக் கடவுளான முருகன் ஆலயம் ஒன்று உள்ளது. இந்த வில்பட்டி, கொடைக்கானல் நகரிலிருந்து, 7 கி.மீ. தொலைவில் உள்ளது.

கொடைக்கானல் என்னும் சொல், காட்டின் முடிவு, கொடிகளின் காடு, கோடை கால காடு, காட்டின் அன்பளிப்பு என பல பொருள் தரும். முன்னர் கொடைக்கானலில் மலைவாழ் மக்களே வாழ்ந்து வந்தனர், பின்னர் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது கோடை காலகங்களில் இங்கு தங்கியிருந்தனர். இனி கொடைக்கானலை சுற்றிப் பார்க்கலாம்.

வெள்ளி நீர்வீழ்ச்சி:

கொடைக்கானலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. கடல் மட்டத்தில் இருந்து 5900 அடி உயரத்தில் இருக்கும் இந்த நீர்விழ்ச்சி பார்ப்பதற்கு வெள்ளியை போன்றே இருக்கும். கொடைக்கானல் ஏரியில் இருந்து வெளிவரும் தண்ணீரே இந்த நீர்வீழ்ச்சியின் பிறப்பிடமாகும். நீர்வீழ்ச்சியின் மொத்த உயரம் 55 மீ.

கொடைக்கானல் ஏரி:

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரி சுற்றுலாப் பயணிகள் காணவேண்டிய இடங்களில் முக்கியமானதாகும். 1863ஆம் ஆண்டு முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களால் உருவாக்கப்பட்டது இந்த ஏரி. மொத்தம் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில் பயணிகள் உல்லாசமாக படகுப் பயணம் செய்ய சுற்றுலாத் துறையின் படகுகள் உள்ளன.


Vanavil New1
இந்த ஏரியின் அருகே மிதிவண்டிகள், குதிரைகள் ஆகியவற்றை சுற்றுலா செல்வோர் வாடகைக்கு எடுத்து ஏரியைச் சுற்றி பயணிக்கலாம்.

ப்ரயண்ட் பூங்கா:

பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீ தொலைவில், கொடைக்கானல் ஏரிக்கு கிழக்கே அமைந்துள்ளது இந்த பூங்கா. மொத்தம் 20.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவை உருவாக்கியவர், எச்.டி.ப்ரயண்ட். இதை அவர் 1908 ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த பூங்காவில் ஏறக்குறைய 325 வகையான மரங்கள், 740 வகையான ரோஜா மலர்கள் உள்ளன.

150 வயதுடைய போதி மரமும், யூகலிப்டஸ் மரமும் இங்கு இருப்பது இந்த பூங்காவின் சிறப்பம்சமாகும். மே மாதம் இங்கு தோட்டக்கலை துறையின் கண்காட்சியும், மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.

கோக்கர்ஸ் நடைபாதை:

1872 ஆம் ஆண்டு கோக்கர் என்பவர் உருவாக்கியதுதான் இந்த நடைபாதை. 1 கி.மீ நீளமுடைய இந்த நடைபாதை பேருந்து நிலையத்தில் இருந்து 0.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. வானிலை நன்றாக இருந்தால் இங்கிருந்து பெரியகுளம், மதுரை, டால்பின் மூக்கு, பம்பா ஆறு போன்றவற்றை காணலாம்.

வான் ஆலன் மருத்துவமனை அருகே தொடங்கும் இந்த நடைபாதை புனித பீட்டர் தேவாலயத்தின் அருகே முடிகிறது. இங்கு சில நேரங்களில் உங்கள் நிழலை மேகங்களின் மீது காணமுடியும்(brocken spectre).

டால்பின் மூக்கு:

பாம்பர் பாலத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 8.0 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கு இருந்து பார்த்தால் பெரியபாறை ஒன்று டால்பின் மீனின் மூக்கு போன்று தெரியும். இந்த பாறையின் கீழே 6600 அடி ஆழமுடைய பள்ளம் இருக்கிறது. இதன் அருகே பாம்பர் அருவி உள்ளது. இந்த அருவியில் liril soap விளம்பரம் எடுக்கப்பட்டது. அதனால் இதனை லிரில் அருவி என்றும் அழைக்கின்றனர்.

பசுமை பள்ளத்தாக்கு(suicide point):

கோல்ப் மைதானத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 5.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பள்ளத்தாக்கு. இந்த பள்ளத்தாக்கின் உயரம் 1500 மீ. வானிலையைப் பொருத்து இங்கிருந்து வைகை அணையை காணலாம்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2