குறையை தகர்த்து.. தடைகளை உடைத்து.. தடகளத்தில் தடம் பதிக்க துடிக்கும் கோவை இளைஞர்

 Friday, January 25, 2019  02:30 PM

சர்வதேச போட்டிகளுக்கு சென்று விளையாடும் அளவிற்கு வசதிகள் இல்லாத காரணத்தினால் கோவையை சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவர் உதவிகளுக்காக காத்து இருக்கிறார்.

சிறு வயதிலேயே இரு கால்களும் செயலற்று போன மாற்றுத் திறனாளியான மனோஜ் குமார், பல தடைகளை கடந்து தடகளத்தில் தேசிய அளவில் சாதித்து வந்துள்ளார்.

பாதியிலேயே நின்ற படிப்பு

உச்சி வெயிலிலும் தனது லட்சியப் பாதையில் பயணிக்க வேண்டி வெறியுடன் மைதானத்தில் விளையாடி கொண்டே இருப்பவர் மனோஜ் குமார். தேனியை சொந்த ஊராக கொண்ட இவர், வேலைக்காக கோவைக்கு வந்த நிலையில், தற்போது ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் சிறு வேலைகளை செய்து வசித்து வருகிறார். ஆறு மாத குழந்தை பருவத்திலேயே போலியாவால் பாதிக்கப்பட்ட இவர், குடும்ப சூழல் காரணமாக கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி வேலைக்கு செய்து வருகிறார்.

ரூ.4 லட்சம் வாகனம் பரிசு

Vanavil NEw2

சிறு வயதிலேயே விளையாட்டு துறையில் ஆர்வம் இருந்தாலும் குடும்ப சூழலால் அதில் பங்கேற்க முடியாமல் இருந்த இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தடகள போட்டியில் பங்கேற்று சாதிக்க வேண்டும் என்ற முயற்சியில் தனது விளையாட்டு பயணத்தை துவங்கி உள்ளார். ஆரம்பத்திலேயே மாவட்ட மற்றும் மாநில அளவில் பதக்கங்களை குவித்து வந்த இவர் , தேசிய அளவிலான தடகள போட்டியிலும் பங்கேற்று பதக்கங்களை தொடர்ந்து குவித்து வந்து உள்ளார். இவரின் திறமையை கண்ட தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சிலர் மாற்றுத் திறனாளிகள் பிரத்யேகமாக தடகளத்தில் பயன்படுத்தும் நான்கு லட்ச ரூபாய் மதிப்பிலான வாகனத்தை பரிசாக அளித்து உள்ளனர்.

ஆசிய போட்டிக்கு தகுதி

அந்த வாகனத்தில் வாங்கிய இரண்டு நாளிலேயே தேசிய தடகள போட்டியில் பங்கேற்றத்தில் பல சர்வதேச வீரர்களையும் பின்னுக்கு தள்ளி தங்க பதக்கத்தை குவித்து உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறிய விபத்தில் சிக்கியதால் காலில் ஏற்பட்ட காயங்களின் காரணமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனாலும், மீண்டும் கடந்த மாதம் ஹரியானாவில் நடைபெற்ற தடகள போட்டியில், 200 மீட்டர் போட்டியில் முதலிடமும், 400, 100 மீட்டர் போட்டியில் இரண்டாம் இடமும் பெற்று தற்போது ஆசிய போட்டிக்கு தகுதி பெற்று உள்ளார்.

Vanavil New1Please login/signup then give your valuable answers

Click here to Login / Signup

Website Square Vanavil2