மனதை மயக்கும் மசினகுடி வனச்சுற்றுலா!

 Wednesday, January 23, 2019  06:30 PM

மலைகளின் ராணி எனப்படும் ஊட்டியிலிருந்து மைசூரு செல்லும் வழியில் 30கிமீ தொலைவில் உள்ளது காடுகள் சூழ்ந்த இயற்கை கொடையான அழகிய மசினகுடி கிராமம்.

ஊட்டிக்கு மிக அருகில் மசினகுடி இருந்தாலும், வணிகமயமாக்கப்பட்ட சுற்றுலா தலங்கள் போல் மாசடையாமல் இருக்கிறது, எங்கு பார்த்தாலும் காடுகள், இங்கு மான்கள், யானைகள், பறவைகள், குரங்குகள், காட்டெருமைகள் என பலதரப்பட்ட மிருகங்களை எளிதில் பார்க்கலாம். இந்த இயற்கைகையை உருக்குலையாமல் பாதுகாப்பதில் பெரும் பங்காற்றுவது இஞ்குள்ள மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களே.

மசினகுடியில் தெப்பக்காடு யானைகள் முகாம், சபாரி, தேயிலைத் தோட்டங்கள், கோபாலசுவாமி பெட்டா கோயில், கல்லிகுடர் ரப்பர் தோட்டங்கள், முதுமலை வனவிலங்கு சரணாலயம், பறவைகள் சரணாலயம் போன்ற இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்க்கலாம்.

தமிழகத்தின் முதல் வனவிலங்கு காப்பகம்!

அழிவின் விளிம்பில் இருந்த தேசிய விலங்கான புலிகளைக் காப்பதற்காக, தமிழத்தில் அமைக்கப்பட்ட முதல் வனக்காப்பகம், முதுமலை. இது 1940ல் நிறுவப்பட்ட இந்த சரணாலயம், தமிழக, கேரள, கர்நாடக மாநிலங்கள் இணையும் அடர்காடுகளில் அமைத்திருப்பது இதன் சிறப்பு. .

முதுமலைச் சரணாலயம், மசினகுடி, தெப்பக்காடு, முதுமலை, கார்குடி, மற்றும் நெல்லகோட்டா என ஐந்து வனச்சரகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சரணாலயத்தினுள் முதலில் செல்லவேண்டிய இடம், தெப்பக்காடு யானைகள் முகாம்.


Vanavil NEw2
1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தெப்பக்காடு யானை முகாமில், யானை சவாரி செய்யலாம். தவிர, யானைகளின் உணவு இடைவேளைகளில் யானைகளைக் கண்டு ரசிக்கலாம்.

காட்டுக்குள் ஓடும் ஒரு சிறு ஓடைதான் தமிழக - கர்நாடக எல்லையைப் பிரிக்கும் கோடு. அந்தப் பக்கம் பந்திப்பூர் வன விலங்குச் சரணாலயம். அங்கும் சவாரி, ட்ரெக்கிங் போன்றவை உண்டு. அப்படியே பந்திப்பூரைக் கடந்து குண்டக்கல் என்ற ஊரில் இடதுபுறம் செல்லும் சாலையைப் பிடித்து சில கி.மீ தூரம் சென்றால், கேரளா மாநிலத்தின் வயநாடு வன விலங்குகள் சரணாலயம் இருக்கிறது. அங்கிருந்து மசினகுடிக்கு திரும்பும் வழியும் இருக்கிறது.

இங்கு வளமாகப் பாயும் மாயாறு சுவையான, சுத்தமான குடிநீரை அனைவருக்கும் அளிப்பதால், மினரல் வாட்டர் பாட்டில்களை யாரும் தூக்கிச் சுமக்கத் தேவையில்லை.

மர உச்சியில் தங்கலாம்

மரத்தாலான வீடு, மர உச்சியில் வீடு, பழங்குடியினர் குடிசை, காட்டுக்குள் வீடு, குடில், தனியார் தங்கும் விடுதி என விதவிதமான தங்கும் வசதிகள் உள்ளன. காட்டிற்குள் தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டிருப்பதால் விலங்குகளை துன்புறுத்தாத வகையில் இரவு நேரங்களில் மங்கலான ஒளி வீசும் விளக்குகள் மட்டுமே இங்கு பயன்படுத்தப்படுகின்றன.

செல்லும் வழி!

ஊட்டியில் இருந்து மைசூர் நெடுஞ்சாலையில் கூடலூர் வழியாகவும் செல்லலாம். அல்லது கல்லட்டி வழியாகவும் செல்லலாம். ஈரோடு - சத்தியமங்கலத்தில் இருந்து சாம்ராஜ்நகர் வழியாக குண்டக்கல், பந்திப்பூர் வழியாக மசினகுடி வரலாம். மலை ஏறி இறங்க யோசிப்பவர்களுக்கு ஒரே வழி, பெங்களூரு - மைசூரு வழியாகச் சுற்றிக்கொண்டு வர வேண்டும்.


Vanavil New1Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2