வண்ண மயமான தெங்குமரஹாடா: 'பைனாகுலர்' இருந்தால் ரசிக்கலாம்

 Tuesday, January 22, 2019  03:30 PM

நீலகிரியில், கோத்தகிரி வட்டத்திற்கு உட்பட்டு தெங்குமரஹாடா கிராமம் அமைந்துள்ளது. கோத்தகிரி பகுதியை சேர்ந்த விவசாயிகள் இங்குள்ள கூட்டுறவு பண்ணை மூலம் விவசாயம் செய்கின்றனர்.தெங்குமரஹாடா கிராமம், இம்மாவட்டத்துக்கு சொந்தமானதாக இருந்தாலும், கோத்தகிரியில் இருந்து, நேரடியாக பாதை இல்லை.

இங்கு செல்லவேண்டும் எனில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வழியாகவே, சென்றுவர முடியும்.இங்கு செல்லும் சாலை, பாதுகாக்கப்பட்ட வனத்துறைக்கு சொந்தமானதாக உள்ளதால், பராமரிப்பின்றி கரடுமுரடான சாலையில், நீண்ட துாரம் பயணித்து, வளம் கொழிக்க ஓடும் மாயாற்றை, பரிசலை கடந்துதான் மக்கள் சென்று வருகின்றனர்.


Vanavil New1
இவ்வாறு, பல்வேறு இடற்பாடுகளை கடந்து, விவசாயிகள் தெங்குமரஹாடா பகுதியில், நெல் உள்ளிட்ட தானிய வகைகளை விவசாயம் செய்து வருகின்றனர். நடப்பாண்டு, விவசாயிகளால், சாமந்தி மற்றும் செண்டுமல்லி போன்ற மலர் வகைகள், அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. உள்ளூரில் வாசம் வீசும் இந்த மலர்கள், கோடநாடு காட்சிமுனையில் இருந்து பார்க்கும் போது, ஆரஞ்சு நிறத்தில் ஓவியம் வரைந்தது போல காட்சியளிக்கிறது.

இந்த அழகை, கோடநாடு காட்சிமுனையில் இருந்து, சுற்றுலா பயணிகள் கண்டுக்களிக்கின்றனர். கோடநாடு காட்சிமுனையில், கடந்த காலங்களில் அதிநவீன 'பைனாகுலர்' பொறுத்தப்பட்டிருந்ததால், சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டுக்களிக்க முடிந்தது. சமீப காலமாக, 'பைனாகுலர்' பழுது காரணமாக, வண்ணமயமான அழகை கண்டுக்களிக்க முடியாமல், பயணிகள் ஏமாற்றத்துடன் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'உலக சுற்றுலா வரைப்படத்தில், இடத்தை பிடித்துள்ள கோடநாடு காட்சிமுனையில், சுற்றுலா பயணிகள், இயற்கை அழகை கண்டுக்களிக்க ஏதுவாக, கோபுரத்தில் உள்ள பாதுகாப்பு அறையில், அதி நவீன 'பைனாகுலர்' வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2