வைதேகி நீர்வீழ்ச்சி...!

 Saturday, January 19, 2019  01:30 PM  2 Comments

கோவை மாவட்டம் என்றாலே பெரும்பாலும் குற்றாலம் தான் மிக பிறசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு பல நீர்வீழ்ச்சிகள் மற்றும் பார்த்து ரசிக்ககூடிய இடங்கள் பல இருந்தாலும் கோவை நரசீபுரம் அருகே உள்ள வைதேகி நீர்வீழ்ச்சிக்கு சென்றதுண்டா!

கோவை குற்றாலம் போன்றே இதுவும் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. காஞ்சிமாநதி என அழைக்கப்பட்ட இந்த இடத்தில் வைதேகி காத்திருந்தாள் என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. அதன் பிறகு காலப்போக்கில் இதை வைதேகி நீர்வீழ்ச்சி என மக்களால் அழைக்கப்பட்டு வருகிறது. நீர்வீழ்ச்சிக்கு செல்ல இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை வனப்பகுதிக்குள் நடந்து செல்ல வேண்டும்.

வைதேகி நீர்வீழ்ச்சி அருவிக்குச் செல்ல இருபது ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறையின் கட்டுப்பாடு இல்லாமல் இருந்தது. ஆனால் பண்டிகை தினங்களில் சுற்றுப்புற கிராமத்து வாசிகள் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு இங்கே வந்து ஆடிப்பாடி, களித்து, விருந்து சமைத்து உண்டு செல்வது வழக்கமாக வைத்துள்ளனர்.


Vanavil NEw2
காலப்போக்கில் இந்த அருவிக்கு 3 கிலோமீட்டர் தூரத்திலேயே பொதுமக்களுக்கு வனத்துறையினரால் தடை போடப்பட்டுள்ளது. அங்கே உள்ள வனத்துறை சோதனைச் சாவடியில் அனுமதி பெற்று உள்ளே செல்ல வேண்டும். இங்கு பல இடங்களில் சிற்றோடைகளையும் காணலாம். அதில் வரிசையாய் தூண்கள் உள்ளன. அந்த தூண்கள் யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க போடப்பட்ட தடுப்பு என சொல்லப்படுகிறது. காவலாளிகளிடம் கேட்டுதான் இங்கு மலையேறுபவர்கள் மலையேற செல்லமுடியும். மலையேற்றக்காரர்களுக்கு ஒரு பிரபலமான இடமாக இது உள்ளது.

இங்கு காட்டு விலங்குகள் அதிகம் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. வைகை நீர்வீழ்ச்சிக்கு போகிற வழியெங்கும் பல விதமான மூலிகை செடிகளின் மணம் கூடவே வருவது போன்று இருக்கும். ஆரஞ்சு, சிகப்பு, பசுமை கலந்த மலர்கள் உடைய செடி, கொடிகளை நாம் இங்கு காண முடியும். பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட கடுக்காய், நன்னாரி, வெட்டிவேர் இந்த வனப்பகுதியில் அதிகமாக உள்ளது.

ஆதிகாலத்தில் இதனைப் பயன்படுத்திதான் நாட்டு மருந்துகள் தயாரித்து மக்களை நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றினார்கள். இது தவிர கொன்னை, தைலம், புளியன், வேம்பு, வேங்கை, ஈட்டி, பாலை, மூங்கில், புங்கன், ஊஞ்சை நிறைந்த வனப்பகுதியாக உள்ளது. முக்கியமாக இதன் உச்சிக்கு போனால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சீமாத்துப்புல் அடர்ந்து வளர்ந்து கிடப்பதைப் பார்க்கலாம்.

இப்படி பல மூலிகைகளை உடைய காடுகள் தற்ப்போது வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து கொண்டே இருப்பதால் வைதேகி நீர்வீழ்ச்சி மிகவும் ஆபத்தானது என்கின்றனர் வனத்துறையினர். வைதேகி நீர்வீழ்ச்சி பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்ட பகுதி. ஆனால் வனத்துறையினரிடம் அனுமதி பெற்றும் செல்லலாம் எனவும் கூறப்படுகிறது.


Vanavil New1Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


Yuva Ykl commented on 2 month(s) ago
Awesome..
Mahendran commented on 2 month(s) ago
இங்கு செல்ல முன்னே அனுமதி பெற வேண்டும்மா? இங்கு செல்ல பேருந்து வசதி உள்ளதா? இருந்தால் பேருந்து எண் கூறவும்

Website Square Vanavil2