கோவையில் ஒருநாள் - எம்.ஜி.ஆர்

 Friday, January 11, 2019  08:30 PM

1956ம் ஆண்டு எம்.ஜி.ஆர். உதவியுடன் தேவர் பிலிம்ஸ் உருவானது. எம்.ஜி.ஆர். நடித்த “தாய்க்குப் பின் தாரம்” தொடங்கி “நல்ல நேரம்” வரை 16 படங்களைத் தயாரித்தது தேவர் பிலிம்ஸ். தன்னுடைய பட வாய்ப்பே கேள்விக் குறியாக இருந்த ஆரம்ப காலத்தில்கூட சின்னப்ப தேவருக்கு சிபாரிசு செய்து போராடி வாய்ப்பு பெற்றுத் தந்த பெருந்தகையாளர் எம்.ஜி.ஆர்.

தேவருக்கு சொந்தமான மாருதி தேகப் பயிற்சி சாலையில் நேரம் கிடைக்கும் போது சென்று உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். தேவர் மீது மிகவும் அன்பு கொண்டிருந்தார்.


Websire custom Vanavil2
தேவர் இறந்தபோது துயரத்துடன் கோவை வந்த எம்.ஜி.ஆர். மயானத்திற்கு செல்லும் நஞ்சுண்டாபுரம் சாலை பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக தோண்டப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதை எடுத்துச் சொன்னார்கள்.

வீட்டிலேயே மாலை அணிவித்து மரியாதை செய்தால் போதுமானது என்றும், காரில் ஆற்றுப் பாலம் வழியாகச் சென்று நஞ்சுண்டபுரம் வந்து விடலாம் என்றும் யோசனை சொல்லப்பட்டது. ஆனால் எதையும் கேட்க மறுத்து, தேவர் உடலுடன் நடந்துதான் வருவேன் என்று தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். கூறினார்.

அவசர அவசரமாக ஆட்களைக் கொண்டு நஞ்சுண்டபுரம் சாலை ஓரளவு சரி செய்யப்பட்டது. முதல்வர், இராமநாதபுரம் தேவர் வீட்டிலிருந்து மயானம் வரை நடந்தே வந்தார். மயானத்தில் கண்களில் நீர் வழிந்தோட துயரத்துடன் தன் நண்பர் அடக்கம் செய்யப்படுவதைக் கவனித்துக் கொண்டிருந்தார்.


Vanavil New1

Vanavil NEw2


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil 1
Website Square Vanavil2