நம்ம ஊரு சமையல் : சேனைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி?

 Friday, January 11, 2019  07:30 PM

தேவையான பொருள்கள்:

சேனைக்கிழங்கு - 1/4 கிலோ
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சோள மாவு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

மசாலா அரைக்க

சோம்பு - 1 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
சின்ன வெங்காயம் - 6

Vanavil NEw2
மிளகு - 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் - 2
தேங்காய் - ஒரு துண்டு

செய்முறை:

* சேனைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

* நறுக்கிய துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து முக்கால் வேக்காடாக வேக விடவும்.

*. மசாலா பொருட்களை தனியே அரைத்துக் கொள்ளவும்.

* வேகவைத்த கிழங்குடன் அரைத்த மசாலா, சோள மாவு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிசறுங்கள்.

* எண்ணெயைக் காயவைத்து, பிசறிய கிழங்குகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுங்கள்


Vanavil New1



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2