கோவை மாநகரில் சிவாஜியின் சாதனைகள்:

 Friday, January 11, 2019  06:30 PM

கோவை மாநகரில் சிவாஜியின் சாதனைகள்:

நூறு நாட்களுக்கு மேல் ஒடிய படங்கள் 33க்கும் மேல்.

கோவையில் அதிக நூறுநாள் படங்கள் கொடுத்த ஒரே நடிகர் நடிகர்திலகம் மட்டுமே. வேறு எவரும் செய்திராத சாதனை இது. தேவர்மகன், படையப்பா, படிக்காதவன் படங்கள் சேர்க்கப்படவில்லை .

ஒரே காலண்டர் வருடத்தில் மூன்று நூறு நாட்கள். .அதுவும் இரண்டு முறை. .அதுவும் தொடர்ந்த வருடங்களில்.
வருடங்கள் 1960-1961

1960

1. இரும்புத்திரை
2.தெய்வப்பிறவி
3.படிக்காதமேதை

மேற்கண்ட மூன்று படங்களும்14.01.1960லிருந்து
25.06.1960 க்குள் ரீலீசான படங்கள்.

ஆறு மாதங்கள் கூட பூர்த்தியாகாத காலகட்டங்களில் வெளியான படங்கள்.

1961
1.பாவமன்னிப்பு
2.பாசமலர்.
3.பாலும்பழமும்.


Vanavil New1
இந்த சாதனைகளும் எவராலும் நிகழ்த்தப்படவில்லை

ஒரே காலண்டர் வருடத்தில் ஒரு மாத இடைவெளியில் வெளியான இரு படங்களும் நூறு நாட்கள் ஓடிய படங்கள்.இந்தச் சாதனை 1958 ஆம் வருடமே நிகழ்த்தப்பட்டுவிட்டது.
படங்கள்:

1.பதிபக்தி(14.0358)
2.சம்பூர்ண ராமாயணம்.(14.04.58)

83ஆம் வருடம் இரண்டு நூறுநாள் படங்களைஅளித்துள்ளார்.அப்போது நடிகர்திலகத்தின் வயது 55.இரண்டிலும் அவர் இளவயது கதாபாத்திரமாக நடிக்கவில்லை.

படங்கள்:
1.நீதிபதி
2.வெள்ளைரோஜா.
வெள்ளை ரோஜாவில் அவருக்கு ஜோடி கிடையாது.
வயதான காலத்தில் வயதான வேடங்களில் நடித்து வெற்றியடையச்செய்த படங்கள்.

2. 150 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள்ஏழு.(7)
அவை:
1.வீரபாண்டிய கட்டபொம்மன்(151)
2.இரும்புத்திர(161)
3.பாசமலர்(151)
4.வசந்தமாளிகை(161)
5.தங்கப்பதக்கம்(158)
6.திரிசூலம்(176)
7.முதல் மரியாதை(175)

தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்திலும் ஏழு படங்கள் 150 நாட்கள் இவரைத்தவிர வேறு யாரும் கொடுத்ததாக தெரியவில்லை


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2