கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் கிராமத்து பொங்கல்


Source: dhinakkavalan.com
 Friday, January 11, 2019  06:09 PM  1 Comments

கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் இன்று தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழ் பாரம்பரிய முறைப்படி கிராமத்து பொங்கலாக கொண்டாடப்பட்டது.


Vanavil NEw2
கோவை பிஎஸ்ஜி தொழில் நுட்ப கல்லூரியில் பொங்கல் பண்டிகையை பாரம்பரிய முறைப்படி கிராமத்து பொங்கலாக கொண்டாடினர். மேலும் இந்த விழாவில் கிராமத்தில் போலவே வைக்கோல் வைத்து மண்பானையில் பொங்கல் வைத்து குலவைகள் போட்டு சூரிய பகவானுக்கு பொங்கல் படைத்து வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து முன்னோர் காலத்தில் செயல்பட்டதை கடைபிடிக்கும் வகையில் கயிறு இழுத்தல், கட்டவண்டி ஓட்டுதல், இளநீர் குடித்தல், கிளி ஜோசியம் பார்த்தால் என கிராமத்தில் வாழும் மக்களை போலவே செயல்பட்டனர்.

மேலும் விளையாட்டு போட்டிகளுக்கு இடையே மாணவ, மாணவிகளின் ஒயிலாட்டம், கோல போட்டிகள், தோரணங்கள், கும்மி கலாச்சார பாடல்கள் ஆடியது காண்போர் கண்களுக்கு விருந்தளித்தன. மேலும் ஆடவர்களுக்கான உரி அடித்தல் போட்டி உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆயிரத்துக்கும் அதிகமாக கலந்து கொண்டனர். கல்லூரி வளாகத்தில் வளாகத்தில் ஆடல் பாடல் என மாணவ, மாணவிகள் உற்சாகதுடன் இருந்தனர். மாணவ, மாணவிகள் எல்லாரும் கைத்தறி புடவை மற்றும் வேஷ்டி அணிந்து வலம் வந்தது காண்போரை பெரிதும் கவர்ந்தது.


Vanavil New1Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


Manikandan A Manikandan A commented on 2 month(s) ago
super 💐💐💐

Website Square Vanavil2