கோவை - தியேட்டர்கள் - ஒரு பார்வை

 Friday, January 11, 2019  04:05 PM  4 Comments

கோவை ஒரு தொழில் நகரம் என்பதினால் என்னவோ இங்கு பொழுது போக்க கூடிய அம்சங்கள் எதுவும் அதிகம் இல்லை.பார்க் அப்படின்னு சொன்னா வ உ சி பார்க், காந்தி பார்க் இதுதான்...

அப்புறம் கோவில் ன்னு எடுத்துகிட்டா மருதமலை கோவில் , அனுவாவி சுப்பிரமணியர் கோவில், ஈச்சனாரி கோவில், பேரூர் கோவில், போன்ற இடங்கள் தான் இருக்கிறது.(நம்ம ஊர் இளசு களுக்கு என்ன பக்தியா வேணும் ...கூட்டிட்டு போகிற தெய்வத்த கும்பிடணுமா... இல்ல அங்க இருக்கிற தெய்வத்த கும்பிடணுமா ....) அப்புறம் ரெண்டு குளம் இருக்கு போட்டிங் போற மாதிரி...சிங்காநல்லூர், அப்புறம் சூலூர்...சிங்கா நல்லூர்ல போட்டிங் நிறுத்தி யாச்சு. ஆனாலும் அங்க ஏதாவது ரெண்டு இளசு கள் கடலை போட்டுட்டு தான் இருக்கும்...

.சூலூர்ல மட்டும் சனி ஞாயிறு நடக்குது. ரொம்ப தூரம் போகணும்னா....சிறுவாணி, மங்கி பால்ஸ், ஆழியாறு, பொள்ளாச்சி, திருமூர்த்தி அணை, உடுமலை, ஆனைகட்டி இப்படி...இந்த பக்கம் போகணும்னா....கல்லாறு, குன்னூர் , ஊட்டி இப்படி....இங்கெல்லாம் போனால் சீக்கிரம் வீடோ ஹாஸ்டலோ திரும்ப முடியாது ...கிடைக்கிற நேரத்துல இருக்கிறத என்ஜாய் பண்ணனும் அப்படிங்கிறதால நம்ம ஊர் இளசுகளுக்கு தியேட்டர் பக்கம் தான் ஏதோ கொஞ்சம் ஆறுதல் கிடைக்குது.

அதனால் கோவையில் இருக்கிற தியேட்டர்கள் பத்தின ஒரு பார்வை..

கே ஜி காம்ப்ளக்ஸ்

இந்த தியேட்டர் கோவை நீதிமன்றம் அருகில் இருக்கிறது.மொத்தம் 4 தியேட்டர் ராகம் தானம் பல்லவி, அனுபல்லவி என இருக்கு. ரொம்ப பேமஸ் ஆன தியேட்டர் இப்போ ரிலையன்ஸ் க்ரூப் பிக் சினிமாஸ் தத்து எடுத்து இருக்கிறது.இதன் அருகிலேயே கே ஜி மருத்துவமனை இருக்கிறது (படம் ரொம்ப மொக்கையா இருந்து யாருக்காவது ஹார்ட் அட்டாக் வந்துச்சுன்னா இங்கயே அட்மிட் பண்ணிகிடலாம் ..)

கற்பகம் காம்ப்ளக்ஸ்

காந்திபுரம் 100 அடி ரோட்டில் இருக்கிறது.இங்கு 3 தியேட்டர்கள் இருக்கு.கங்கா, யமுனா, காவேரி என இருக்கிறது.இங்க கேண்டீன் ல கொஞ்சம் விலை அதிகம்.

செந்தில் குமரன் காம்ப்ளக்ஸ்

காந்திபுரம் பஸ்ஸ்டாண்ட் அருகில் இது இருக்கிறது.செந்தில், குமரன் என இரண்டு தியேட்டர் இருக்கிறது.கோவையில் ISO வாங்கின முதல் தியேட்டர்.

கவிதா தியேட்டர்
இதுவும் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் இருக்கிறது.இதுக்கு பக்கத்திலேயே நம்ம டாஸ்மாக் இருக்கு.

பாபா காம்ப்ளக்ஸ்
பூ மார்க்கெட் அருகில் இந்த தியேட்டர் இருக்கிறது.அர்ச்சனா தர்சனா,என இரண்டு தியேட்டர்கள்.

VR காம்ப்ளக்ஸ்
வடகோவை மேம்பாலம் அருகே இந்த தியேட்டர் இருக்கிறது.சென்ட்ரல் , கனக தாரா என இரண்டு தியேட்டர்கள் இருக்கிறது.ரொம்ப நாள் ஓடாம இருந்து இப்போ புதுபிக்கப்பட்டு இருக்கிறது.

மாருதி தியேட்டர்
இந்த தியேட்டரும் வட கோவையில் தான் இருக்கிறது.அதிகமான ஆங்கில படங்கள் மட்டுமே வெளி யாகும்.இப்போ இந்த தியேட்டர் ரொம்ப மோசமான நிலையில் இருக்கு.

Vanavil New1

சண்முகா தியேட்டர்
இந்த தியேட்டரும் பூ மார்க்கெட் அருகில் தான் இருக்கிறது.அதிகமான மலையாள, ஆங்கில பிட்டு படங்கள் மட்டுமே வெளி யாகும்.என்ன அதிசயம் ன்னு தெரியல..இப்போ எம் ஜி யார் படம் போட்டு இருக்காங்க

ஜி பி தியேட்டர்
கோவை டு சத்தி ரோட்டில் ஆம்னி பேருந்து நிலையம் அருகில் இந்த தியேட்டர் இருக்கிறது. பிரீதம் , கீதம் என இரண்டு தியேட்டர் இருக்கிறது அதிகமான ஆங்கில படங்கள் மட்டுமே தமிழ் டப்பிங் கில் வெளி யாகும்.அப்பப்ப பிட்டு படம் வரும்

கே என் எம் காம்ப்ளக்ஸ்
கோவை ரயில் நிலையம் அருகில் இந்த தியேட்டர் இருக்கிறது.சாந்தி சாரதா என இரண்டு தியேட்டர் இருக்கிறது. இதன் அருகில் கலெக்டர் ஆபீஸ் இருக்கிறது
.
கர்னாடிக் தியேட்டர்
கோவை கோனியம்மன் கோவில் அருகில் இந்த தியேட்டர் இருக்கிறது.அதிகம் ஹிந்தி படங்கள் மட்டுமே வெளி யாகும்.

ராயல் தியேட்டர்
இதுவும் ரயில் நிலையம் அருகில் தான் இருக்கிறது.மலையாள புது ரிலீஸ் படங்கள் அதிகம் வெளியாகும்.

நாஸ் தியேட்டர்
டவுன் ஹாலிலிருந்து உக்கடம் செல்லும் வழியில் இது இருக்கிறது.ரொம்ப பழைய படங்கள் செகண்ட் ரிலீஸ் படங்கள் வெளியாகும்.

டிலைட் தியேட்டர்
டவுன் ஹால் அருகில் இருக்கிற வெரைட்டி ஹால் ரோட்டில் இது இருக்கிறது.தமிழ் திரைப்பட முன்னோடி வின்சென்ட் அவர்களின் தியேட்டர் இது.இன்னும் இரு ஆண்டுகளில் நூற்றாண்டு விழா கொண்டாடப் போகும் தியேட்டர் ஆக இருக்கிறது.அதிகம் எம்ஜியார் சிவாஜி பழைய படங்கள் மட்டுமே வெளியாகும்.

பரூக் பீல்ட்ஸ், பன் மால், Prozone Mall :

கோவைக்கு புதிய வருவுகளான இந்த மால்களில் இளைஞர்களின் கூட்டம் அலைமோதும் இதன் வரவு கோவைக்கு புதிய அடையாளத்தை கொடுத்திருக்கு எனலாம். (இளசுகளுக்கு ஏற்ற இடம்....)

மஹாராஜா மல்டிபிலக்ஸ்
நீலம்பூர் அருகில் மஹாராஜா தீம் பார்க் அருகிலே இது அமைந்து இருக்கு. இங்கேயும் இரண்டு அரங்குகள் இருக்கிறது.

நகரத்திற்கு வெளியே கவுண்டம்பாளையம், துடியலூர், வடவள்ளி, பீளமேடு, சிங்காநல்லூர், கணபதி, பேரூர், வேலாண்டிபாளையம் இப்படி ஊருக்கு வெளியே நிறைய தியேட்டர்கள் இருக்கின்றன..

வருத்தம்: கடந்த சில வருடங்களில் நிறைய தியேட்டர்கள் மூடப் பட்டு விட்டன (கோவை மட்டுமல்ல தமிழகம் முழுவதும்) ...இது இன்னும் தொடரும் என்பது தான் உண்மை...


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


Jagadeesh commented on 5 month(s) ago
👌👌👌
kannan commented on 5 month(s) ago
🙏😂😁😂🙏 royal theatre one of best old, And kennady, irudhaya theatres. 🗣 Thanks to inform!!
vijaykarthi vijaykarthi commented on 5 month(s) ago
👍
Pechimuthu Natarajan Pechimuthu Natarajan commented on 5 month(s) ago
Thanks for reminding the pride

Website Square Vanavil2