தமிழக முதலமைச்சர்களின் வாழ்வில் நமது கோவை

 Friday, January 11, 2019  03:50 PM

தமிழகத்தின் இரு முதலமைச்சர்களுக்குத் திரையுலகின் வாசலைத் திறந்ததும் கோவைதான். அவர்கள் கலைஞர் மு.கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இருவரும் கோவையில் சிங்காநல்லூரையடுத்துள்ள ராமநாதபுரம் என்ற பகுதியில் தங்கியிருந்து, அங்கிருந்து குதிரை வண்டியில் படப்பிடிப்பு நிலையத்திற்குச் செல்வார்கள். இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமியின் படங்களில் வசனகர்த்தாவாக செயல்பட்டார் கலைஞர். ‘அபிமன்யூ’ என்ற படத்திற்கு கலைஞர் வசனம் எழுதினார்.

Vanavil New1

படம் வெளியானதுபோது தன் மனைவியுடன் திரையரங்கத்திற்குச் சென்று பார்த்த கலைஞருக்கு அதிர்ச்சி. டைட்டிலில், வசனம் என்ற இடத்தில் இயக்குநரின் பெயர்தான் இருந்தது. (அபிமன்யூவில் கலைஞரின் பெயரே தவிர்க்கப்பட்டது என்றாலும், பின்னர் வந்த படங்களில் படத்தின் தலைப்பையடுத்து, வசனம்-கலைஞர் மு.கருணாநிதி என்ற பெயர் வந்தபிறகே நடிகர்-நடிகைகளில் பெயர் இடம்பெற்றது. அதுதான் கலைஞரின் பேனாவிற்குரிய வலிமை) அபிமன்யூ படத்தில் அபிமன்யூவின் அப்பா அர்ஜூனனாக மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் நடித்து கலைஞரின் வசனங்களைப் பேசினார்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2