கிராமமாக இருந்து உயர்ந்த கள்ளக்குறிச்சி

 Thursday, January 10, 2019  01:30 PM

சென்னை, ஜன.9: 1960 வரை கிராமமாக இருந்த கள்ளக்குறிச்சி இன்று மாவட்ட தலைநகரமாக உயர்ந்து உள்ளது. புதிய மாவட்டம் அமையும் போது தங்களுக்கு சாலை வசதி கிடைக்கும் என கல்ராயன் மலைப்பகுதி கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தின் 33-வது புதிய மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதய மாகிறது. மாநிலத்தின் மிகப் பெரிய மாவட்டமாக இருந்த விழுப் புரம் பிரிக்கப்பட்டு இந்த புதிய மாவட்டம் அமைக்கப்படுவதாக
சட்டமன்றத்தில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
2008-ல் கோவை மாவட்டம் பிரிக்கப்பட்டு திருப்பூர் மாவட்டம் அமைக்கப்பட்ட பிறகு இப்போது தான் புதிய மாவட்டம் உருவாகிறது. 25 ஆண்டுகளுக்கு முன் தென் ஆற் காட்டில் இருந்து விழுப்புரம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. 1099 கிராம பஞ்சாயத்துக்களை கொண்ட இந்த மாவட்டமே தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக இருந்து வந்தது.

1960 வரை கிராமமாக இருந்த கள்ளக்குறிச்சி மேம்படுத்தப்பட்டு டவுண் பஞ்சாயத்தாகவும், அதன் பின்னர் சிறப்பு டவுண் பஞ்சாயத்தாக வும், அதையடுத்து 3-வது கிரேடு முனிசிபாலிட்டியாகவும் உயர்ந்தது.

Vanavil New1

2010 செப்டம்பர் 7-ல் நகராட்சியாக மாறியது. இந்த நகராட்சி 21 வார்டு களைக் கொண்டது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்ராயன் மலைப் பகுதி மிகவும் பின்தங்கியது ஆகும்.
நாடு சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் கழித்து 2010-ல் தான் இங்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. இந்த மலைப்பகுதியைச் சுற்றி 30 கிராமங் கள் உள்ளன. இவற்றில் வெள்ளி மலை என்ற குக்கிராமத்திற்கு மட்டும் தான் சாலை வசதி உள்ளது. அரசு மினி பஸ் இங்கு 4 தடவை சென்று வருகிறது.

கல்வராயன்மலையில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் விழுப்புரம் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் தொலைதூரம் சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சலுகைகளை பெற வேண்டியது இருந்தது.இனி கல்வராயன் மலை பகுதி முன்னேற்றம் அடையும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். சாலை வசதியற்ற கல்ராயன் மலையோர கிராம மக்கள் இனி அடிப்படை வசதிகள் கிடைக்கும் என மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளாகவே கள்ளக் குறிச்சியை தனி மாவட்டமாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்ததாகவும், 2007-ல் இதை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றதையும் சமூக ஆர்வலர் கள்ளக்குறிச்சி ஜெ.அருண் கென்னடி நினைவுகூர்ந்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட அறிவிப்பை வரவேற்று உள்ளனர்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2