சாப்பாட்ட வேஸ்ட் பண்ணாதீங்க.. எங்ககிட்ட குடுங்க....

 Tuesday, January 8, 2019  08:30 PM

2018-ம் ஆண்டில் உலகளாவிய பசி பட்டியலில் (Global Hunger Index) இடம்பெற்ற 119 நாடுகளில் இந்தியா 100வது இடத்தில் இருக்கிறது. வாஷிங்கடனைச் சேர்ந்த சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி மையம் (IFPRI) உலக நாடுகளின் இந்தப் பசி தொடர்பான அறிக்கையை வெளியிட்டடிருக்கிறது.

உணவு உற்பத்தியில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் 5 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு ஐந்து குழந்தைகளிலும் உயரத்திற்கு குறைவான எடையில் ஒரு குழந்தை இருக்கிறது. இதன் காரணமாக இந்தியா ஒரு “அபாயமான கட்டத்தில்” உள்ளதாக அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.

Arunhitech_curom1

இப்படி வறுமையிலும், பசியிலும் வாடுபவர்களுக்காகவே ‘நோ ஃபுட் வேஸ்ட்' என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. 2014-ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டது 'நோ ஃபுட் வேஸ்ட்' என்ற தன்னார்வ அமைப்பு. இந்த அமைப்பானது வீட்டு விழாக்கள், கார்ப்பரேட் மீட்டிங்க்ஸ், ஓட்டல்கள், ஸ்கூல், காலேஜ், பேங்க்வெட்ஸ் போன்ற இடங்களில் இருந்து மீறும் உணவுப் பொருள்களை வாங்கி, அதைச் சேகரித்து ஏழை எளிய மக்களுக்கு வழங்கி வருகிறது.

நிகழ்ச்சிகளில் மீந்து போகும் உணவுகளை வீணடிக்காமல், இவர்களின் 90877 90877 எனும் உதவி எண்ணுக்கு கால் செய்தால் போதும், உங்களின் இடத்தைத் தேடி வந்து உணவை எடுத்துச் செல்கின்றனர். கொண்டுசெல்லும் உணவின் தரத்தை உண்ணக் கூடியதா என பரிசோதித்து, உடனே அவற்றைக் காப்பகங்கள், ஸ்லம்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் வீடின்றி வாழும் ஏழைகள் ஆகியோருக்கு தாங்களே விநியோகம் செய்கின்றனர்


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


arunhitech_sqr1
Website Square Vanavil2
Arunsqr4
Arunhitechsqr5
AdSolar1
Arunhitech_sqr2