நம்ம ஊரு சமையல் : நீர்ச்சத்து அதிகம் உள்ள புதினா தோசை

 Thursday, December 6, 2018  07:30 PM

புதினா தோசை செய்வது எப்படி?

முதலில் தோசை மாவோடு நறுக்கிய மல்லி,புதினா,பச்சை மிளகாய்,வெங்காயம்,தேவைக்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

2 கப் புதினா இலைகளை சுத்தம் செய்து வெறும் கடாயில் சில நிமிடங்கள் வதக்க வேண்டும். சற்று சூடு குறைந்ததும் அதோடு இரண்டு ஸ்பூன் மிளகும் கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து மிருதுவாக அரைக்கவும்.

Vanavil New1

5 கப் இட்லி மாவு எடுத்து அதில் அரைத்த புதினா மற்றும் இரண்டு ஸ்பூன் சீரகம் சேர்த்து தோசை வார்க்கவும்.

மருத்துவ பயன்கள் :

புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சம்.


Vanavil NEw2



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2