நம்ம ஊரு சமையல் : கிழங்கான் மீன் குழம்பு & ஃப்ரை

 Wednesday, December 5, 2018  07:30 PM

குழம்பிற்கு தேவையான பொருட்கள்:

கிழங்கான் மீன் - 8- 10 மீன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு ,வெந்தயம்,சோம்பு - தலா அரைடீஸ்பூன்
பூண்டு பல் - 6
பெரிய வெங்காயம் - 1
தக்காளி பெரியது - 1
பச்சை மிளகாய் - 2
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் -ஒன்னரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்,சீரகத்தூள்,மிளகுத்தூள் - தலா கால் டீஸ்பூன்
மல்லி கருவேப்பிலை சிறிது
உப்பு - தேவைக்கு.

மீனை செதில் நீக்கி ,வயிற்றில் உள்ள கழிவை எடுத்து தலையை கழித்து சுத்தமாக நன்கு கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும்.

கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ,பாதி வெங்காயம்,பாதி தக்காளி,தேங்காய் துருவல்,மற்ற எல்லா மசால் தூள் வகைகளைச் சேர்த்து சிவற மீடியம் நெருப்பில் வைத்து வறுத்து எடுத்து ஆற வைத்து அரைத்து எடுக்கவும். புளி கரைத்து அரைத்த மசால் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு,வெந்தயம்,சோம்பு போட்டு வெடிக்கவும்,கருவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவும்.நறுக்கிய பாதி வெங்காயம், தக்காளி ,பச்சைமிளகாய், சிறிது உப்பு சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.
அரைத்து புளித்தண்ணீரோடு கலந்து வைத்த மசாலை சேர்க்கவும்.உப்பு சரி பார்த்து குழம்பு தேவைக்கு தண்ணீர் ஒரு கப் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். வற்றி இப்படி வரும்.நறுக்கிய ,மல்லித்தழை சிறிது சேர்க்கவும்.குழம்பு நன்றாக கொதிப்பதில் தான் ருசியே இருக்கிறது.

Vanavil NEw2

குழம்பு, புளி தேங்காய் மசாலா வாடை மடங்கியதும் சுத்தம் செய்த மீனை சேர்க்கவும்.கலந்து விட்டு மீடியம் நெருப்பில் பத்து நிமிடம் அகப்பை போடாமல் மீனை வேக விடவும்.

மீன் வெந்து எண்ணெய் மேலெழும்பி வரும்.அடுப்பை அணைக்கவும்.

சுவையான கிழங்கான் மீன் குழம்பு ரெடி.

ப்லைன் ரைஸ், ஆப்பம்,சப்பாத்தி இட்லி,தோசையுடன் பரிமாறலாம்.

கிழங்கான் மீன் ஃப்ரை :

மீன் - 8-10
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - கால்- அரைடீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
கார்ன் ஃப்லோர் - 2 டீஸ்பூன்
ரெட் கலர்- பின்ச்(விரும்பினால்)
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

மீனுடன் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் கலந்து அரை- ஒருமணி நேரம் ஊறவைக்கவும்.
எண்ணெய் காய வைத்து,மீனை முறுக பொரித்து எடுக்கவும்.

சுவையான கிழங்கான் மீன் ஃப்ரை ரெடி .
சீரகப் பொடி அரைடீஸ்பூன் சேர்த்தால் மீன் ஃப்ரை சீரக மணத்துடன் இருக்கும்.


Vanavil New1Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2