பாலாவின் பார்வையில்... பொள்ளாச்சி சுற்றுலா தலங்களில் உள்ள சீர்கேடுகள்

 Wednesday, December 5, 2018  02:30 PM

இந்த கட்டுரை பற்றிய தங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

* பொள்ளாச்சி இயற்கை எழிலால் சூழப்பட்ட அமைதியான அழகான பிரதேசம்... சுற்றிலும் தென்னை மரங்களும் வயல் வெளிகளும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் சாரலும் என இயற்கை அழகை மாலையாக சூழப்பட்ட பிரதேசம் (ஒருகாலத்தில் இப்போ பாதி பிளாட்கள் போடப்பட்டு இருக்கிறது). அதிகமான திரைப்படங்கள் நம் பகுதியை சுற்றியே எடுக்கப்படுவதற்கு காரணமும் இதன் அழகும் வளமும் தான்.

* நம் பொள்ளாச்சியின் சிறப்பு மாட்டு சந்தை, மாரியம்மன் தேரோட்டம், காய்கறி மார்க்கெட், பொள்ளாச்சி சந்தை, நேரு ரவுண்டான, அரசியல் கட்சிகள் போராட்டம் என்றாலும் பொதுகூட்டம் என்றாலும் நடக்கும் ஓரே இடம் திருவள்ளுவர் திடல், அதிகமான மக்கள் கூடும் கடை வீதி, பொழிவு இழக்காத கிராமங்கள் மற்றும் இன்னும் பலவற்றை கொண்டுள்ளது (தற்போது குடியால் சீரழிந்து வருகிறது பலவகையில் வேதனை).

* நம் பொள்ளாச்சி மேலும் தனிசிறப்பாக எழில் சூழ்ந்த இயற்கையை தன்னகத்தே கொண்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் இதனை சுற்றி பல சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. விடுமுறை நாட்களிலும் வார கடைசியில் வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவுமே முறையாக செய்து தரப்படுவது இல்லை அதனை முறையாக பராமரிக்கப்படுவதும் இல்லை அவலநிலையே இன்றுவரை நீடிக்கிறது வேதனை.

* பொள்ளாச்சியை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் இருக்கும் சீர்கேடுகளின் பட்டியல்.

#ஆழியார்_அணை - ஆழியார் அணை விவசாயத்திற்கும் குடிதண்ணீர்க்கும் உயிர்நாடி. சுற்றிலும் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு அடிவாரத்தில் மலைகளுக்கு மத்தியில் அதனை தாங்கி பிடிப்பது போன்ற ஓர் தோற்றத்தையும் தரும் ரம்மியமான பிரதேசம். அணையை சுற்றி இருக்கும் மக்கள் இலைப்பார ஒய்வெடுக்க சிறுவர்கள் விளையாட பூங்கா ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் என்று அமைக்கப்பட்டதோ அன்று தொடங்கி இன்று வரை மாறாமல் அதே மாதிரி இன்று வரை தொடர்கிறது எந்த ஒரு மாற்றங்கள் எதுவுமே இல்லாமலே இருக்கிறது. உடைந்து போன சிலைகளின் கைகளுக்கு மாவுகட்டு போட கூட யாருமில்லை. உடைந்து போன விளையாட்டு சாதனங்கள் துருப்பிடுத்தி போயி காட்சி தருகின்றன. இயற்கை உபாதைகளை போக்க புதியதாக கட்டப்பட்டவை இன்னமும் திறப்புவிழா காணவில்லை பாதுகாப்பாக பூட்டி வைத்துள்ளார்கள்.(யாருக்காக காத்திருக்கிறார்களோ). பழைய கட்டிடத்தில் இலவச நோய்கள் அணைபோல் பெறுகியுள்ளது. அணையில் படகு போக்குவரத்து பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் நடைபெறுகிறது. நுழைவு கட்டணம் அரசாங்கத்தின் வருவாயை பெறுக்க மட்டுமா இல்லை அதனை கொண்டு அணையை சுற்றியுள்ள பகுதிகளில் மாற்றங்களை ஏற்படுத்தினால் மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும். கேரளா பாலக்காடு மலம்புழா அணையும் அதன் பூங்காவும் அதன் பராமரிப்பும் வியக்க வைக்கிறது. மக்களின் கூட்டமும் அதனால் அதிக வருவாய் அவர்களுக்கு கிடைக்கிறது முன்பு இருந்ததை விட. இதேபோல் என்றுதான் மாறுமே இதை மாற்றுவார்களோ தெரியவில்லை...

#மங்கிபால்ஸ் -மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள முக்கியமான அருவி தண்ணீர் இருக்கிறதோ இல்லையோ இந்த அருவிக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகம். நுழைவு கட்டணமாக தலை ஒன்றுக்கு 20ரூபாய் வசூலிக்கப்படுகிறது(தற்போது 30ரூபாய்). ஆனால் அருவியை பார்க்க வேண்டுமானால் அழகாக இருக்கும் அதில் குளிக்க வேண்டும் என்றால் அது சாகசங்கள் நிறைந்தவையாக இருக்கும் எப்போதும் வழுக்கி விழுவோம் என்று தெரியாது அருவி விழும் இடங்களில் எந்த ஒரு தடுப்பு கம்பிகளும் இல்லாமலும் எந்தவித பாதுகாப்புமே இல்லாமல் இருக்கிறது. முக்கியமாக பெண்களுக்கு ஆடைமாற்ற பாதுகாப்பான இடங்களை சரிவர பராமரிக்க படாமல் இருக்கிறது. அவர்கள் குளிக்க தனியாக இடங்கள் இல்லாமல் இருப்பதும் பலவகையான இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அடிக்கடி சிறு விபத்துகள் பாதுகாப்பில்லா காரணத்தாலும் பயணிகளின் அலட்சியத்தாலும் நிகழ்கிறது. இதற்கும் எப்போது தீர்வு தான் காண்பார்கள் வாங்கும் பணத்திற்கு ஏற்ற தரம் இல்லை என்றாலும் வேற வழி இல்லாமல் வந்து செல்லும் பயணிகளை போல என் ஏக்கமும் போகுமோ.


Vanavil NEw2
#வால்பாறை - மலைகளின் அரசி ஊட்டி, இளவரசி கொடைக்கானலை போல இளவரசனாக திகழும் மேற்கு தொடர்ச்சி மலை வால்பாறை... சுற்றிலும் தேயிலை எஸ்டேட்களும் மலை பிரதேசங்களும் தண்ணீர் உயிர் அணைகளும் நீர்பிடிப்பு பகுதிகளும் ஆறுகளையும் பலவகையான காட்டூயிர்களும் உயிரனங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இயற்கை முத்தமிட்டு செல்லும் ரம்மியமான பிரதேசம். அதனால் தான் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அங்கே இருக்கும் சுற்றுலா தலங்களின் எண்ணிக்கை அதிகம் ஆனால் அதற்கு முறையான வழிகாட்டும் தகவல் மையம் இல்லை. தெரியாதவர்கள் வால்பாறையில் அதிகம் தெரிந்த இடங்களை மட்டுமே சென்று வருகிறார்கள். சரியான உணவங்கள் இல்லை(அம்மா உணவங்களை இங்கே திறந்தால் நல்லா இருக்கும்) விலைகள் தாருமாறாக இருக்கிறது. வாகனங்களை நிறுத்த போதுமான வசதிகள் இல்லை. ஒரு அழகான பிரதேசம் நிர்வாக சீர்கேட்டால் அழுக்காக மாறிவருகிறது. அழகை ரசிக்க வந்தவர்களுக்கு அழுகை வருவதை தடுக்க இயலாது உண்மையாகவே இயற்கை காதலர்கள் எனில். தங்கும் விடுதிகளின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது அதன் கட்டணமும் தான். முறையாக அதனை சீர்ப்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் அரவே அரவே உபயோகப்படுத்துவதை விட்டுவிடுங்கள்.

அதனை தடுப்பதும் முறைப்படுத்துவதும் நிர்வாகத்தின் கைகளிலும் நம் நெஞ்சங்களிலும் இருக்கிறது. சுற்றுலா வரும் பயணிகளுக்கு தேவையானவற்றை முறையாக செய்தால் வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகுமே தவிர குறைய போவது இல்லையே அரசாங்கத்தின் வருவாயும் இதனால் அதிகரிக்குமே.

#டாப்சிலிப் இதுவும் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்குள் அமைந்த அடர்ந்த மலை பிரதேசம். அழகிய மான் கூட்டங்களை பார்க்கவே அதிகமானோர் படையெடுத்து வருவார்கள். அருகிலே பல இடங்கள் இருக்கிறது கும்கி யானை வளர்ப்பு முகாம் அதனை சுற்றியுள்ள இடங்களும் பார்க்க பார்க்க அழகு. ஆனால் இங்கேயும் அடிப்படை வசதிகள் குறைவு இல்லை... போகும் வழிதடங்கள் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது ஆபத்தான சாலைகள் உயிர் பயத்தை ஏற்படுத்துகின்றன. வாங்கும் நுழைவு கட்டணத்தை வருவாயாக மட்டும் பார்த்தால் வருபவர்கள் வராமல் போய்விடுவார்கள்.

* நம் பொள்ளாச்சி மட்டும் இல்லை இன்னும் பல இடங்களில் இதே போன்ற நிலை தான் இருக்கிறது.

* மலிவு விலை சுற்றுலா தலங்கள் என்பதனால் மட்டுமே அதிகமானோர் குடும்பம் குடும்பமாக வருகிறார்கள். விலை மட்டுமல்ல எல்லாமே மலிவாக இருக்கிறதே அதுதான் வேதனை.

* இயற்கை என்ற அன்னை நமக்கு கொடுத்தவற்றை எல்லாம் பெற்றுவிட்டு அந்த அன்னையை முதியோர் இல்லங்களில் கொண்டுபோய் சேர்க்காமல் இருப்பது நமக்கு தான் நல்லது. நாம் தான் பொறுப்பாக பார்த்து கொள்ள வேண்டும் நம் அன்னையை போல.

**உங்கள் விருப்பங்களோடு கருத்துக்களையும் பதிவிடுங்கள் நண்பர்களே. நன்றி.

**ஒருநாள் விடியும் என்ற நம்பிக்கையோடு நான் உங்களுடன் பகிருகிறேன் எனது கருத்தை**


Vanavil New1Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2